மூன்றாவது மூன்று மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி வீடியோ

Video Courtesy: WebMD

உங்களது கர்ப்பத்தின் கடைசி வாரத்தில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் குழந்தைகளும் பல மாற்றங்களை சந்திப்பார்கள். இந்த மாற்றங்கள் அவர்கள் எப்போது வெளியே வருவார்கள் எனும் தோரணையை ஏற்படுத்தும். அவர்களது உடல் எடை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் வெளியில் வருவதற்கு முன்பே சில செய்கைகளை செய்து பயிற்சி எடுத்து கொண்டிருப்பார்கள். இங்கு மூன்றாவது மூன்று மாத காலத்தில் குழந்தையின் வளர்ச்சியை வாரங்களில் பார்க்கலாம்.

28 -வது வாரத்தில், உங்கள் குழந்தை 6 அங்குல நீளம் இருக்கும். அவர்களால் கண்களை திறந்து பார்க்க முடியும் மற்றும் அவர்களது கால் விரல் நகங்கள் வளர துவங்கி இருக்கும்.

29 -வது வாரத்தில், உங்கள் சிறிய குழந்தை 3 பவுண்ட் எடை இருக்கும். ஏறத்தாழ ஒன்றரை கிலோ எடை. அவர்களது எடை அதிகரித்து சற்று சதை பிடிப்புடனும், குழந்தையின் சருமம் மென்மையாகவும் மாறி இருக்கும்.

30 -வது வாரத்தில், இப்போது குழந்தை 16 அங்குல நீளம் இருக்கும். அவர்களால் எளிமையாக கண்களை திறக்கவும், மூடவும் முடியும். மேலும் அவர்கள் ஒளியை பொறுத்து உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.

31 மற்றும் 32 -வது வாரத்தில், குழந்தையின் உடல் எடை அதிகரிக்க துவங்கி இருக்கும். இப்போது அவர்களது எடை ஒன்றரை கிலோவிலிருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கும். அவர்களது உடல் எடை மற்றும் அளவு ஏற்று கொள்ளக் கூடியதாகவும், வலிமையுடனும் இருப்பார்கள். மெதுவாக அவர்கள் சாதாரணமான சில செயல்களை செய்வும் முயற்சித்து கொண்டிருப்பார்கள்.

33 -வது வாரத்தில், இப்போது குழந்தையின் எடை 4 பவுண்ட் இருக்கும். விழுங்குதல், கொட்டாவி விடுதல் மற்றும் சுவாசித்தல் போன்றவற்றை அவர்களால் செய்ய முடியும். இறுதியில் அவர்களது உடல் வெப்பநிலையை, அவர்களின் மூளை கட்டுப்படுத்த துவங்கி இருக்கும்.

34 -வது வாரத்தில், இப்போது குழந்தை 4.5 பவுண்ட் எடை இருக்கும். அவர்களது தோலும் சரியாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

35 -வது வாரத்தில், குழந்தையின் எடை 5 பவுண்ட் இருக்கும். இப்போது குழந்தை சுவாசிக்க பழகி இருப்பதுடன், வெளியில் வருவதற்கும் தயாராகி இருக்கும். குழந்தையின் விரல் நகங்கள், விரல் நுனி வரை வளர்ந்திருப்பதோடு, குழந்தையின் நிறம் பிங்க் வண்ணத்தில் மாறி இருக்கும். அவர்களது கால்களிலும் சதைப்பற்று ஏற்பட்டிருக்கும்.

36 -வது வாரத்தில், இப்போது குழந்தையின் எடை 6 பவுண்ட் (2.7 கிகி) இருக்கும். குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் வெளி உலகிற்கேற்ப நன்கு வளர்ந்து தயாராகி இருக்கும்.

37 -வது வாரத்தில், உங்கள் குழந்தை பெரிய முட்டைக்கோஸ் போன்று கனமாக இருக்கும். இப்போது கருப்பையிலும் அதிக இடம் இருக்காது. இப்போது உங்கள் குழந்தைக்கு வெளியில் வர வேண்டும் என்று எண்ண தோன்றும்.

39 -வது வாரத்தில், இப்போது உங்கள் குழந்தை வெளிவர தயாராக இருக்கும். மேலும் குழந்தையின் எடை 6 பவுண்ட் (3 கிகி) இருக்கும். இப்போதைய நிலையில் குழந்தைகள் நுரையீரல் மூலம் சுவாசிப்பதோடு கத்தவும், அழவும் செய்வார்கள். குழந்தை உங்கள் பிறப்புறுப்பு பகுதிக்கு வரும் போது, அவர்களின் தலை கூம்பு வடிவத்தில் இருக்கும்.

இப்போது வெளி உலகிற்கு வருவதற்கு முழுமையாக உங்கள் குழந்தை தயாராக இருக்கிறது. பல வித மாற்றங்களுக்கு பிறகு உங்கள் குழந்தை உங்களை பார்ப்பதற்கு வெளியில் வரும் போது, நீங்கள் எல்லையற்ற ஆனந்தத்தில் இருப்பீர்கள். 

Leave a Reply

%d bloggers like this: