கர்ப்பகால கால பரிசோதனையில் மனதைத் தொட்ட 9 விஷயங்கள்..!

ஒரு பெண் கர்ப்பம் தரித்த நொடி முதல் அவள் ஏகப்பட்ட உணர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் உள்ளாகிறாள். அதே போல், அதிகமான மருந்து மாத்திரைகள் உண்டு, பரிசோதனைகள் செய்து கொள்ளும் காலகட்டமும் இதுவே.! அப்படி கர்ப்பகாலத்தில் நிகழும் பரிசோதனைகளில் பெண்களின் மனதைத் தொட்ட சில விஷயங்களை பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்..! 

1. ஹைய்யா குழந்தை..!

கர்ப்பகாலத்தில் நிகழும் முதல் பரிசோதனையில் கருவில் வளரும் குழந்தை உருவை, பார்க்க நேரிடும் போது, ஹைய்யா என் குழந்தை என்று பெண்ணின் மனது குதூகலிக்கிறது.

2. நிச்சயப்படுதல்..!

கருத்தரிப்பு நிச்சயப்படும் சமயம், அந்த வானத்தையே எட்டிப் பிடிக்கும் அளவு ஆனந்தம் கொள்கிறாள் பெண்மணி..

3. குண்டாதல்..

‘குழந்தைக்கும் நான் சேர்த்து உண்ணப்போவதால், குண்டாகி அழகிய தோற்றத்தை இழந்துவிடுவேனே’ என்று சிறிது மனவருத்தம் அடைவாள்.

4. வியப்பு..!

பிறப்புறுப்பில் இருக்கும் சிறு துளை மூலம், என் குழந்தை எப்படி வெளியே வரும்..??! அந்த சமயம் எனக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்று பெண்ணின் மனது பயம் கலந்த வியப்பை எட்டும்.

5. ஜீன்கள்..

குழந்தைக்கு எங்களின் நல்ல குணம் கொண்ட ஜீன்கள் போய் சேருமா? குழந்தை சரியாக வளர்கிறதா? என்ற கேள்விகள் பெண்ணின் மூளையைக் குடையும்..

6. உடல்நிலை..!

கர்ப்பத்தால், உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்; அவை என்னை நோயாளியாக்கி விடுமோ, நான் என் பலத்தை இழந்து பலவீனமாவேனோ என்றெல்லாம் எண்ணிக் குழம்பிக் கொள்வாள் பெண்..

7. எப்படி சொல்வேன்..?!

நான் கருத்தரிப்பதை எப்படி கணவரிடமும் உறவுகளிமும் கூறுவது? கூறியவுடன் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று எண்ணி ஆனந்தம் கொள்வாள்…

8. பையனா? பெண்ணா?

என்னுள் கருவாகி இருக்கும் இந்த சிசு, பையனாக இருக்குமா இல்லை பெண்ணா? என்று குழந்தையை பற்றி எண்ணுவாள்..

9. அம்மா..!

நான் குழந்தையாக இருந்து, சிறுமியாக வளர்ந்து, குமரியாகி, மனைவியாகி இப்பொழுது அம்மாவாக போகிறேன்..! என்று எண்ணி குத்தாட்டம் போடுவாள், பெண்மணி..!

Leave a Reply

%d bloggers like this: