கர்ப்பம் குறித்த 10 கட்டுக்கதைகள்.., வெளியாகியது உண்மை!

ஒரு பெண் கர்ப்பம் அடைந்து விட்டால், போதும் அறிவுரை கூறவும் அளந்துவிடவும் அனைவரும் வந்து விடுவர்; தங்கள் கருத்துக்களை பதிய வைப்பது போதாதென்று, தாங்கள் படித்த கட்டுக் கதைகளையும் பரப்ப முயற்சிப்பர். இந்த கருத்துக்களையும் கதைகளையும் கேட்டு எது உண்மை எது பொய்? எதை நம்புவது எதை நம்பக் கூடாது என கர்ப்பிணிகள் குழம்பிவிடுவர். அவர்களின் இந்த குழப்பத்தை தீர்க்கவே இந்த பதிப்பு.. படித்துத் தெரியவும்..! 

1. குழந்தையின் படங்கள்..!

வீடு முழுவதும் அழகிய குழந்தையின் புகைப்படங்களை மாட்டி வைத்திருந்தால், கர்ப்பிணிகளுக்கு அழகான குழந்தை பிறக்கும் என்ற கதையை நம்பி வருபவர் பலர். ஆனால் அது உண்மையல்ல. சுவரில் தொங்கும் படம் உங்களுக்கு எப்படி அழகிய குழந்தையை அளிக்க முடியும்? என்ன ஒரு முட்டாள்தனம்..! நீங்கள் சத்தான உணவு உண்டால் மட்டுமே அழகிய ஆரோக்கியம் பொருந்திய குழந்தை பிறக்கும்.

2. இளநீர்..

கர்ப்பத்தின் 7 வைத்து மாதம் இளநீர் அருந்தினால் குழந்தையின் தலை, தேங்காய் போல் பெரிதாக இருக்கும்; இளநீரில் அதிக பொட்டாசியம் சத்து உள்ளது, இது தாய்க்கு சக்தியை அளிக்கும்.

3. தேங்காய் தண்ணீர்..

தேங்காய் தண்ணீர்அதிகம் குடித்தால், குழந்தையின் தலை முடி நன்றாக வளரும் மற்றும் தாய்க்கு அமிலப் பிரச்சனை ஏற்படும். குழந்தையின் வளர்ச்சியால் தாய்க்கு வயிற்றில் சிறிது வலியோ, ஒருவித உணர்வோ ஏற்படலாம்; தேங்காய் தண்ணீர் தான் தாயின் வயிறு வலிக்கு காரணம் என்பது முட்டாள்தனம்.

4. மீன்..!

காலை உணவில் தோலில்லா மீன் உண்டால், பிறக்கும் குழந்தை வெள்ளைத் தோலுடன் பிறக்கும் என்பார்கள்; அது உண்மையல்ல, மீன் உண்பது கர்ப்பிணிகளுக்கு நல்ல சக்தி அளிக்குமே தவிர பிரச்சனை உண்டு பண்ணாது.

5. கிரகணங்கள்..!

கிரகணங்களின் போது கர்ப்பிணிகள் எந்த செயலும் செய்யக் கூடாது, அப்படி செய்தால், அது குறைபாடுள்ள குழந்தையை பரிசளிக்கும்; இது சுத்த பொய், கிரகணங்கள் ஒரு இயற்கை நிகழ்வே, இந்நிகழ்வின் போது கர்ப்பிணிகள் மட்டுமல்லாது, அனைவரும் கவனமாக இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்;

6. வயிற்றின் வடிவம்..

வயிற்றின் வடிவம் கொண்டு, குழந்தையின் பாலினத்தை கூறிவிடலாம். இது சுத்தமான கதையே! அப்படி கூற முடியுமென்றால், எதற்கு ஸ்கேன் அது இது என அத்துணை கண்டுபிடுப்புகள் தோன்றியுள்ளன. வயிற்றின் வடிவம் குழந்தையின் வளர்ச்ஹஸியை பொருத்தது; பாலினத்தை பொருத்தது அல்ல.

7. பெண்ணின் பிரச்சனை..

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கொண்டு, குழந்தையின் பாலினத்தை அறியலாம். என்ன ஒரு முட்டாள் தனம்! பெண்ணிற்கு ஏற்படும் பிரச்சனைகள் வைட்டமின் சத்துக் குறைபாட்டால் ஏற்படுவன. அதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.

8. தோல்..

தாயின் தோல் மாறுபாட்டைக் கொண்டு குழந்தையின் பாலினத்தை அறியலாம். இது கதையே! பெண்ணிற்கு தோலில் ஏற்படும் பிரச்சனைகள் வைட்டமின் சத்துக் குறைபாட்டால், சுற்றுச் சூழல் மாசுபாட்டால் ஏற்படுவன. இது எவ்வகையிலும் குழந்தையின் பாலினத்திற்கு காரணமாகாது.

9. நெய்! எண்ணெய்!

நெய் மற்றும் எண்ணெய் உண்பது, குழந்தையினை பிரசவ சமயம் இலகுவாக வெளிவரச் செய்யும். சுத்தப் பொய்! இப்படி உண்பதால், தாயின் உடல் எடை அதிகரிக்குமே தவிர வேறு எந்த நன்மையையும் இல்லை.

10. இரட்டை உணவு..

கர்ப்பிணிகள் இன்னொரு உயிரை தன்னுள் கொண்டுள்ளதால், அவர்கள் இரட்டை உணவு உண்ண வேண்டும். சுத்த மூட நம்பிக்கை..! கர்ப்பிணிகள் தாங்கள் வழக்கமாக உண்ணும் உணவுடன் 300 கலோரிகள் அதிகமாக இருக்குமாறு உண்டாலே போதுமானது.

Leave a Reply

%d bloggers like this: