குழந்தைகளுக்கு சக்தி அளிக்கும் 5 மதிய உணவுகள்..!

குழந்தைகள் சற்று பெரியவர்களாகி பள்ளி செல்ல தொடங்கிவிட்டாலோ அல்லது வீட்டில் இருந்தாலோ அவர்களுக்கு சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு அளிப்பது அன்னையின் கடமையாகும். தினம் ஒவ்வொரு வகை உணவாய், விதவிதமான சுவையுடன் உணவு சமைத்து, அன்னை தன் கடமையை சீரும் சிறப்புமாக செம்மையாக செய்ய உதவவே இந்த பதிப்பு..!

1. Sticky lemon chicken:

தேவையான பொருட்கள்:

4 சிக்கன் துண்டுகள், 1 எலுமிச்சை, 2 தேக்கரண்டி வறண்ட thyme leaves, 1 1/2 தேக்கரண்டி தேன்.

செய்முறை: சிக்கனுடன், உப்பு மிளகு சேர்த்து, 5 நிமிடங்கள் grill செய்து கொள்ளவும். சிக்கன் வேகும் சமயத்தில், எலுமிச்சையை மெல்லிய பாகமாக அறுத்துக் கொள்ளவும். அறுத்த எலுமிச்சையை சிக்கன் மீது வைத்து, அதன் மீது thyme இலைகளை தூவி, தேனினை சிறிது தூவிக் கொள்ளவும்..! அவ்வளவு தான், Sticky lemon chicken தயார்..!

2. Frozen fruit sticks with passion fruit and lime drizzle

தேவையான பொருட்கள்:

100கி ஸ்ட்ராபெரி, 8 விதையில்லா திராட்சைகள், 100கி மாம்பழம், 100கி மெலன் பழம், 2 கிவி பழம், 100கி அன்னாசி பழம், எலுமிச்சை சாறு, 4 passion பழங்கள், 1 தேக்கரண்டி சர்க்கரை.

செய்முறை: எலுமிச்சை சாறு, passion பழம், சர்க்கரை இவற்றை கலக்கிக் கொள்ளவும். மற்ற பழங்களை அறுத்து இதனுடன் கலந்து, அடித்துக் கொள்ளவும்; பின் இக்கலவையை குளிர்சாதனப் பெட்டியில் 45 நிமிடங்கள் வைத்து, பின் எடுத்து குழந்தைக்கு பரிமாறவும்.. இப்பழங்கள் கிடைக்கவில்லை எனின், வீட்டிலுள்ள பழங்களை வைத்துக் கூட இதை தயாரிக்கலாம்..

 

3. Spicy chicken salad with broccoli

தேவையான பொருட்கள்:

2 புரோக்கோலி, 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், 5 shallots finely sliced, handful pitted black olives, 4 வறுக்கப்பட்ட சிக்கன், 4 தேக்கரண்டி சோயா சாஸ், 2 நறுக்கப்பட்ட மிளகாய், 2 பூண்டு பல்.

செய்முறை: புரோக்கோலியை வேக வைத்துக் கொள்ளவும்; shallots னை 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். பின் இதில் மிளகாய் மற்றும் பூண்டினை சேர்த்து மேலும் 4 நிமிடங்கள் வதக்கவும். பின் இக்கலவையில், புரோக்கோலி, சிக்கன், ஆலிவ் போன்றவற்றை சேர்க்கவும். இந்த சாலடின் மீது சோயா சாஸினை விட்டு, பரிமாறவும்..

4. Creamy mustard mushrooms on toast

தேவையான பொருட்கள்:

1 முழுதானிய பிரட், 1 1/2 தேக்கரண்டி வெண்ணெய், , 3 handful sliced காளான்கள், 2 தேக்கரண்டி பால், 1/4 தேக்கரண்டி முழுதானிய mustard, 1 தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடலை எண்ணெய், 1 தேக்கரண்டி snipped chives.

செய்முறை: பிராட்டினை toast செய்து, அதன் மீது வெண்ணெய் தடவவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து, காளான்களை சமைக்கவும். பின் இதில் பால், mustard, வெண்ணெய் சேர்க்கவும். இக்கலவையை பிரட்டில் வைத்து பரிமாறவும். இதனுடன் ஆரஞ்ச் சாறு பருகினால், மிக அருமையாக இருக்கும்.

5. Chicken, soya and ginger pilaf

தேவையான பொருட்கள்:

2 தேக்கரண்டி காய்கறி எண்ணெய், 1 வெங்காயம், இஞ்சி சிறு துண்டு, 1 சிவப்பு மிளகாய், 3 தோலில்லா சிக்கன், 250கி பாஸ்மதி அரிசி, 600மிலி காய்கறிகள் stock, 100கி பதப்படுத்தப்பட்ட சோயா பீன்கள், கொத்தமல்லி இலைகள்.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கொள்ளவும், இதில் வெங்காயம், இஞ்சி, மிளகாய் இவற்றை சேர்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்களுக்கு பின் சிக்கன் மற்றும் அரிசியை சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு பின் stock சேர்த்து வேக வைக்கவும். பின் உணவினை மூடி வைத்து விட்டு 8-10 நிமிடங்களுக்கு சமைக்கவும், அரிசி மற்றும் சிக்கன் வேகும் வரை. சமையலின் கடைசி பகுதியில் சோயா பீன்களை சேர்த்து 3 நிமிடங்கள் சமைக்கவும். இதன் மீது கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்..  

Leave a Reply

%d bloggers like this: