கர்ப்பகாலத்தில் நோய்வாய்ப்படுவதை தவிர்க்க 9 வழிகள்

உடல்நிலை சரியில்லாமல் போவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது அப்படி அலட்சியமாக விடமுடியாது. ஏனெனில், அது உங்களை மட்டுமின்றி குழந்தையையும் பாதிக்கும். நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் சில சமயம் உடல்நிலை மோசமாவதை தடுக்க இயலாது. இது காற்றில் உள்ள வைரஸ் மூலமாகவோ அல்லது உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மூலமாகவோ ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் உங்கள் நோய்எதிர்ப்பு தன்மையானது பலவீனமாக இருக்கும். எனவே நீங்கள் எளிதில் நோய்வாய்ப்படலாம். இதனை தடுக்க முடியாது என்பதற்காக நீங்கள் தடுக்க முயற்சி செய்யக்கூடாது என்று இல்லை.

1 சுகாதாரமாய் இருத்தல்

சுகாதாரமாய் இருக்க மறந்துவிடாதீர்கள். ஒவ்வொருமுறை உணவு எடுத்துக்கொள்ளும் முன்னும் வெளியில் சென்று வீடு திரும்பினாலும் கைகளை கழுவுங்கள். பெரும்பாலும் கிருமிகள் பரவுமிடம் கதவு கைப்பிடி, பணம் மற்றும் உங்கள் கைபேசியாகும்.

2 ஆரோக்கியமான உணவுமுறை

உங்கள் உணவுமுறை ஆரோக்கியமாய் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாயிருங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும் உங்கள் உணவுமுறை உங்களை விரைவில் குணமடைய செய்யும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள்.

3 உடற்பயிற்சி

உங்களின் கற்பகாலத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்குவதோடு இரவில் நல்ல உறக்கத்தை பெறவும் உதவும்.

4 முன்னெச்சரிக்கை

உங்களுக்கு அதிக களைப்போ, இருமலோ, தும்மலோ தொடர்ச்சியான மூக்கடைப்போ இருப்பின் உங்களுக்கு சளி பிடித்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு இது ஆபத்தானது. எனவே அறிகுறிகள் தெரிந்தவுடனே மருத்துவரை அணுகுவது குணப்படுத்த சுலபமாய் இருக்கும்.

5 நீரேற்றம்

உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும். முடிந்த வரை போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

6 மாத்திரைகள் சாப்பிடுதல்

மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தவித ஆண்டிபையாட்டிக் மாத்திரைகளையும் சாப்பிடாதீர்கள். தேவையற்ற மருந்துகளை தவிர்த்திடுங்கள். சளி மற்றும் தலைவலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

7 ஒவ்வாமைகள்

சில ஒவ்வாமைகள் இருப்பின் வீட்டிலுள்ள இரசாயனங்கள், சிகரெட் புகை, மற்றும் உங்களுக்கு ஒவ்வாமை தரும் அனைத்து பொருள்களிலிருந்தும் விலகி இருங்கள்.

8 வைட்டமின்கள்

வைட்டமின் சி நிறைந்துள்ள பழங்களை அதிகம் உண்ணுங்கள், உங்களை மற்றும் குழந்தையை வசதியாக வைத்து கொள்ள சூடான பொருட்களை மறக்க வேண்டாம்.

9 நோய்தொற்று

கர்ப்பகாலத்தில் சிறுநீர் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது நாற்றம் அடித்தல் இதன் அறிகுறியாகும். பருத்தியாலான உள்ளாடைகளை பயன்படுத்துதல் நன்மை தரும். இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அது இரண்டாம்நிலை நோய்த்தொற்றாகும். எனவே மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த அறிகுறிகள் எல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நிகழ்வதுதான். எந்த சூழ்நிலையிலும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்ககூடாது. அதுமட்டுமின்றி சரியான அளவிற்கு ஓய்வு, உடற்பயிற்சி என அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும். இது உங்களை நோய்வாய்ப்படுவதிலிருந்து பெரிதும் பாதுகாக்கும்.

Leave a Reply

%d bloggers like this: