கர்ப்ப காலம் குறித்து உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் காலம். கர்ப்ப காலத்தில் இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என பல விதமான கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். கர்ப்ப காலம் குறித்து பலர் பல விதமாக சொல்லிருந்தாலும் அதை குறித்து உங்களுக்கு சொல்லப்படாத சில உண்மைகளை இங்கு பார்ப்போம்.

1 நீங்கள் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் கருவில் இருக்கும் குழந்தை சிறுநீர் கழிக்கும். ஒரு நாளைக்கு சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் கழிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறுநீரை கருவில் இருக்கும் குழந்தை குடிக்கும் எனவும் கூறுகிறார்கள்.

2 கர்ப்ப காலத்தில், மாதங்கள் ஆக ஆக, உங்கள் கர்ப்பப்பையின் அளவு ஒரு தர்பூசணியின் அளவிற்கு விரிவடையும். இது உங்கள் கர்ப்பப்பையின் சராசரி அளவை விட 500 மடங்கு அதிகமாகும்.

3 பிரசவத்திற்கு பிறகு உங்கள் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு, ஒரு கர்ப்பம் தரிக்காத பெண்ணின் உடம்பில் 3 ஆண்டுகளுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவை விட அதிகமாகும்.

4 கருவில் இருக்கும் குழந்தையால் வலியை உணர முடியும். நீங்கள் நினைத்து கூட பார்க்காத பல விஷயங்களை உங்கள் கருவில் இருக்கும் குழந்தை செய்யும். அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போது நன்றாக கவனித்து பாருங்கள்.

5 ஒரு ஆய்வில், பத்தில் ஒன்பது பெண்கள் கர்ப்ப காலத்தில் தங்களின் தோல் நிறங்களில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

6 கர்ப்ப காலத்தில் உங்கள் இதயத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் இதயம் உங்கள் குழந்தைக்கும் தேவையான இரத்தத்தை வழங்கும். இதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இக்காரணத்தால் தான் சில நேரங்களில் கர்ப்பமான பெண்களுக்கு மூக்கிலும் ஈறுகளிலும் இரத்தம் வழியும்.

7 ஒரு ஆண்டு முழுவதும் கர்ப்பமாக இருக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? உலகில் நீண்ட கால கர்ப்பம் 375 நாட்களில் பதிவுசெய்யப்பட்டது.

8 மரபியல் மற்றும் குடும்ப வரலாறை தவிர்த்து பார்த்தோமானால், உயரமான மற்றும் அதிக உடல் எடை உடைய பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

9 கர்ப்ப காலத்தில் உங்களின் நுகரும் திறன் மிக நன்றாக வேலை செய்யும். அதனால் தான் சில உணவுகளை கண்டால் உங்களுக்கு குமட்டல் ஏற்படும். இது உங்கள் உடல், அந்த உணவு உங்கள் குழந்தைக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்று தெரிவிக்கும் ஒரு அறிகுறியாகும்.

10 பெண் குழந்தைகள் கருவில் இருக்கும் போதே, தங்களுக்கு தேவையான கருமுட்டைகளை உற்பத்தி செய்துவிடும். ஆனால் ஆண் குழந்தையால் பருவமடையும் வரை விந்தணுவை உற்பத்தி செய்ய முடியாது. 

Leave a Reply

%d bloggers like this: