ஒரு பெங்காலி குடும்பத்தி குழந்தையொன்று பிறக்கும்போது பல வேடிக்கையான ஆச்சரியங்கள் காத்திருக்கும் அவர்களுக்கு. அந்த வேடிக்கையான பழக்கவழக்கங்களை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
1 குழந்தை பிறக்கப்போவதை யாரும் அறியக்கூடாது
ஒன்பதாவது மாதத்தில் அம்மா பாயசம் சாப்பிடும் ஒரு உணவு உண்ணும் சடங்கில் கலந்துகொள்ளவேண்டும். இதன்மூலம் அவர்கள் கடவுளை ஏமாற்றுவதாகவும், எனவே குழந்தை பிறப்பதில் எந்த சிக்கலும் வராது என்றும் பெங்காளிகளால் நம்பப்படுகிறது. குழந்தைக்கான துணிகளை வாங்குதல், படுக்கை வாங்குதல் என குழந்தை பிறக்க போவதற்கான எந்த முன்னேற்பாடும் செய்யப்படமாட்டாது. இந்த சடங்கின் பின்னால் உள்ள விஞ்ஞானம், குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்து விடாதபடி தெய்வங்கள் தடுக்கிறார்கள் எனவும் அவர்களிடம் இருந்து குழந்தையை பாதுகாக்கவே இந்த சடங்கு செய்வதாகவும் பெங்காளிகள் நம்புகிறார்கள்.
2 பேய்களை விரட்டுதல்
குழந்தைகள் பிறந்து மூன்று வயது வரையிலும் குழந்தைகள் கண்களிலும், நெற்றியிலும் மை பொட்டு இடுவார்கள். காரணம், இந்த கருப்பு போட்டு குழந்தைகளை பேய்களிடம் இருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. குழந்தையின் அழகை பற்றி பக்கத்துக்கு வீட்டினரோ , அல்லது சொந்தக்காரர்களோ புகழ்ந்து பேசினால் மிளகாய்களை வைத்து திருஷ்டி சுத்தி போடும் பழக்கமும் இருக்கிறது. இது கண் திருஷ்டியை போக்கும் என நம்பப்படுகிறது.
3 முதல் முறை உணவு கொடுக்கும்போது மணமகன்/மணமகள் போல அலங்கரித்தல்
குழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுக்கும் சடங்கு அன்னப்ராஷன் என்று அழைக்கப்படுகிறது. ஆறு அல்லது ஏழு மாதமான குழந்தையை மணக்கோலத்தில் அலங்கரித்து அம்மாவின் மடியில் அமர வைப்பார்கள். மண், வெள்ளி நாணயம், புனித புத்தகம் மற்றும் பேனா போன்ற சில பொருட்களை குழந்தைக்கு முன் வைப்பார்கள். மண் விவசாயத்தையும், பேனா படிப்பையும், நாணயம் செல்வா செழிப்பையும், புனித புத்தகம் மதத்தையும் குறிக்கும். அதற்கு பின் ஒரு தங்க மோதிரத்தை பாயசத்தில் நனைத்து அதனை குழந்தையின் வாயில் சப்ப கொடுப்பார்கள். பின்னர் சிறிய பாத்திரத்தில் மீனும், சுக்ட்டோ எனப்படும் காய்கறிகளால் செய்யப்பட்ட சைவ உணவும், ஒரு இனிப்பு பொருளையும் கொடுப்பார்கள். பெங்காளிகளின் சடங்குகள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால். குழந்தைகளை பராமரிப்பதில் அவர்களுக்கு இணை அவர்கள் மட்டுமே.