சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றவர்களுக்கான 9 விஷயங்கள்

சுகப்பிரசவத்தில் குழந்தையை பிரசவிப்பது என்பது ஒரு அழகான அனுபவம். அது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தாலும், உங்கள் உள்ளிருந்து வெளியே வந்திருக்கும் உங்கள் குழந்தையை பார்த்தவுடன் அனைத்தும் மறைந்து விடும். உங்களது வலிகள் காணாமல் போயிருக்கும். இப்போது உங்கள் வாழ்வே வண்ண மையமானதாக உணர்வீர்கள். குழந்தையை பிரசவிப்பது உங்களை சிறந்த பெண்ணாக உணர செய்யும். உங்கள் உடல் குழந்தையை வெளியேற்றுவதற்கான பலத்தை பெற்றிருக்கிறது என்பதை அப்போது தான் உணர்வீர்கள். உங்களுடன் ஒத்துப் போகும் 9 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

1 குழந்தையை கத்திக்கொண்டு வெளியே தள்ளி மாயாஜாலம் போல் 5 நிமிடத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியாது. இது உண்மை தான், அதீத சக்தி கொண்ட மனிதர்களை தவிர யாராலும் இதை செய்ய முடியாது. இது குறைந்தது 45 நிமிடத்திலிருந்து 20 மணி நேரங்களுக்கு மேலும் ஆகலாம்.

2 கர்ப்ப காலத்தின் இறுதியில் பிரசவ வலி மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை திடீரென எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்படும். இது மிகவும் தனித்துவமானதாகவும், வலி நிரம்பியதாகவும் இருக்கும். இது நீங்கள் கர்ப்பமாக இருந்த போது எதிர்பார்த்ததிலிருந்தும் வேறுபட்டு இருக்கலாம்.

3 தற்செயலாக ஏற்படும் தும்மல் மற்றும் சிறுநீர் போன்றவை கழிவறையில் உங்களை அழ செய்து விடும். உங்களால் சிறுநீர் பையை கட்டுப்படுத்த முடிந்தால், நீங்கள் கட்டாயம் உங்களை நினைத்து பெருமை பட வேண்டும்.

4 உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் தாம்பத்தியம் என்பது கனவாக மாறி இருக்கும். இப்போது உங்கள் குழந்தையை பிரசவித்திருப்பதால், உங்களது மனம் மற்றும் உடல் தாம்பத்தியத்திற்கு தயாராகி இருக்காது. நீங்கள் பழைய நிலைக்கு திரும்பும் வரை உங்கள் கணவர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது தான்.

5 உங்கள் குழந்தையின் சரியான வடிவமைப்பை பெறாத தலை கண்டு நீங்கள் கவலையடையலாம். ஆனால், தொடர்ச்சியாக உங்கள் குழந்தையின் தலை சரியான வடிவத்தை பெற மாறிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள் மற்றும் சிறிது காலத்திலேயே குழந்தையின் தலை மற்றவர்களை போல் சரியான வடிவத்திற்கு மாறி விடும்.

6 உங்கள் குழந்தை வயிற்றில் இருப்பதால், தொடர்ச்சியாக அந்நியர்கள் உங்களை தொடுவதை சாதாரணமாக அனுமதிப்பீர்கள். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? எப்போது பிரசவ தேதி? போன்ற கேள்விகள் உங்களது நாட்களை உணர்த்திக் கொண்டே இருந்திருக்கும். இப்போது அவை முடிவிற்கு வந்திருக்கும்.

7 உங்கள் அந்தரங்க உறுப்பில் ஏற்பட்டிருக்கும் புதிய தன்மை சற்று கடினமான ஒன்று தான். நீங்கள் புதிதில் இதை வித்தியாசமாக உணர்த்தாலும், தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு விரைவில் பழைய நிலைக்கு மாறிவிடும்.

8 உங்களது அந்தரங்க உறுப்பில் வறட்சி ஏற்படும். சாதாரணமாக சொன்னால், உங்கள் அந்தரங்க உறுப்பில் அதிக அளவில் வறட்சி ஏற்பட்டிருக்கும். அதன் பின் நீங்கள் ஒரு தாய்ப்பாலூட்டும் தாய் என்பதை உணர்வீர்கள்.

9 கருவில் இருக்கும் உங்கள் குழந்தையை பரிசோதிப்பதற்காக, உங்கள் அந்தரங்க உறுப்புப் பகுதியை மகப்பேற்று மருத்துவரிடம் காட்டுவது உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம்.   

Leave a Reply

%d bloggers like this: