குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க உதவும் 4 வழிகள்..!

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களுக்கு பல விஷயங்களை, ஒரு பெற்றோராய் செய்திருப்பின், கற்றுக் கொடுத்திருப்பீர்; அவ்வாறு நீங்கள் கற்றுக் கொடுத்த, கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயங்களுள் மிக முக்கியமானது, குழந்தையின் அழகான கையெழுத்து. கையழுத்து அவ்வளவு முக்கியமா என்ற கேள்வி உங்களுள் எழலாம்.  

கையெழுத்தே உங்கள் குழந்தையின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் என்பதை மறவாதீர்; எப்படி தெரியுமா? குழந்தைகள் வாழ்வில் வளமாக வாழ, நல்ல படிப்பு, நல்ல வேலை அவசியம். என்னதான் குழந்தைகள் விழுந்து விழுந்து படித்தாலும் அவர்களின் மதிப்பெண், கையெழுத்தினை கொண்டே தீர்மானிக்கப்படும். நல்ல மதிப்பெண்கள் இருந்தால் தான், நல்ல மேற்படிப்பு, வேலை எல்லாம்.. இப்பொழுது கையெழுத்தின் மகிமையை புரிந்திருப்பீர்.

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்கும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள் பெற்றோர்களே..!

1. எடை தூக்குதல்..

குழந்தைகள் முதன் முதலில் எழுத தொடங்கும் போது, பேனாவினை பிடிக்கவே தெரியாமல் இருப்பர்; சில குழந்தைகளோ பேனாவினை பிடித்து எழுதும் சக்தி அற்றவராய் இருப்பர். ஆகையால், இந்த பிரச்சனையை சரி செய்ய குழந்தைகளை குறைந்த எடை கொண்ட பொருட்களை தூக்கச் செய்யுங்கள், இதனால் அவர்களின் கை தசைகள் வலிமை பெறும். எழுதுவது எளிதாகும்; மேலும் கையில் வலி தோன்றாமல் இருக்கும்.

2. கதை..

குழந்தைகளை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்துங்கள்; இது குழந்தைகளின் கற்பனை திறத்தை மேம்படுத்தி அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும். புத்தகங்களால் பெற்ற கற்பனை திறன், அழகான எழுத்தாகவோ அல்லது ஓவியமாகவோ குழந்தைகளிமிருந்து வெளிப்படும்.

3. எடுத்துக்காட்டு..

குழந்தைகள் அழகான கையெழுத்து என்றால் என்ன என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்; அவர்களுக்கு புரியும் வகையில் பல, எளிய உதாரணங்களை எடுத்துக் காட்டி அவர்களை புரியுமாறு செய்யுங்கள்..

4. ஊக்கம்..

குழந்தைகள் முதலில் எழுத தொடங்கையில், கையெழுத்து அழகாக இல்லாமல் கிறுக்கலாக இருக்கும். வாக்கியம் நேராக இல்லாமல் கோணல் மாணலாக இருக்கும். இவற்றிற்கு குழந்தையை திட்டாமல், எப்படி அழகாக எழுத வேண்டும் என்று கற்றுக் கொடுத்து, ஊக்குவியுங்கள்..! 

Leave a Reply

%d bloggers like this: