குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

குழந்தை பெற்ற பின், செய்ய வேண்டிய முக்கிய நிகழ்வு குடும்பக் கட்டுப்பாடு. இன்றைய காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்ற பின் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர், இளம் தம்பதியர்கள். இதை செய்வதற்கு முன் யோசித்து செயல்படுபவர் சிலரே! பலரும் பின்விளைவுகள் மற்றும் பொருளாதார நிலை குறித்து யோசிக்காமல் செய்து கொண்டு, பின்னால் துன்பப்படுகின்றனர். அப்படி என்னென்ன விஷயங்களை தான், குடும்ப கட்டுப்பட்டு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டும்? வாருங்கள் பதிப்பினை படித்து அறியலாம்… 

1. உடலுறவு..!

குடும்பக் கட்டுப்பட்டு செய்யும் எண்ணம் இருந்தால், கட்டுப்பாடு அவசியம். அறுவை சிகிச்சை செய்த பின்னரும் உடலுறவில் கட்டுப்பாடு அவசியம், ஏனெனில் தற்காலத்தில் அறுவை சிகிச்சை நிகழ்ந்த பின்னரும் கூட பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். ஆகையால் அறுவை சிகிச்சை செய்யும் முன் இந்த விஷயங்கள் குறித்த சரியான திட்டமிடல் அவசியம்..

2. காலம்..

அறுவை சிகிச்சை நிகழ மற்றும் அதன் காயங்கள் ஆற, சில காலம் ஆகலாம். இந்த காலகட்டத்தில், வேலை மற்றும் குடும்பத்தை கவனித்தல் மற்றும் தன்னையும் பார்த்துக் கொண்டு, குழந்தையையும் எப்படி பார்த்துக் கொள்வது என்பது குறித்த சரியான கால திட்டமிடல் வேண்டும்.

3. நச்சு நீக்கம்..

கருப்பையினுள் தேவையற்ற நச்சுக்களோ அல்லது தேவையற்ற விஷயங்களோ இருந்தால், அவற்றை சுத்தமாக நீக்கிய பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த நச்சுக்கள் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

4. பொருளாதாரம்..

அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன், அதற்கான போதுமான பொருளாதார வசதி உள்ளதா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வாறு யோசிக்காமல் விடுத்து, கடன் வாங்கி கடனாளியாகாமல் நிதி நிலைமை பற்றிய சரியான திட்டமிடல் வேண்டும். 

Leave a Reply

%d bloggers like this: