பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லி தர வேண்டியவை

குழந்தைகள் கருவில் இருக்கும் போது அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருப்போம். அவர்களுக்கு கருவிலேயே பலவற்றை கற்றுக் கொடுப்போம். ஆனால், குழந்தைகள் பிறந்து வளரும் பருவதில் அவர்களுக்கு பலவற்றை கற்றுக் கொடுக்க மறந்து விடுகிறோம். பெற்றோர் குழந்தைகளுடன் அவ்வப்பொழுது நேரம் செலவிடவும், அவர்களின் வயதிற்கேற்ற படி அறிவுரைகள் வழங்கவும் வேண்டும். இங்கு பெற்றோர் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அறிவுரைகள் பற்றி பார்க்கலாம்.

1 அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், அந்நியர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை குழந்தைகளுக்கு பிடித்ததாய் இருந்தாலும், பெற்றோர் அல்லது உறவினரை தவிர யாரிடமும் வாங்கக் கூடாது அறிவுறுத்த வேண்டும். அவர்கள் வற்புறுத்தினால் பெற்றோரிடம் அனுமதி பெற்ற பின்னே வாங்க வேண்டும்.

2 இப்போதைய குழந்தைகள் பெரும்பாலும் தீக்காயங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாய் இருப்பது அறியாமையே. பெற்றோர் எவ்வளவு கவனமாக பார்த்து கொண்டாலும் சூடான பொருட்களை தொடுவது, தீயில் கையை விடுவது போன்றவற்றை குழந்தைகள் கண் இமைக்கும் நேரத்தில் செய்து விடுகிறார்கள். தீயின் பாதிப்புகள் குறித்து குழந்தைகளுக்கு கற்று கொடுக்கவும், அவற்றின் அருகில் செல்ல கூடாது என்பதையும் விளக்க வேண்டும்.

3 குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் மறைக்க கூடாது. குழந்தைகளுக்கு பெற்றோரிடம் மறைக்க வேண்டிய விஷயங்கள் என ஏதும் இருக்க கூடாது. குறிப்பாக பெற்றோரிடம் மறைக்க சொல்லி உறவினர்கள், அண்டைவீட்டவர்கள் மற்றும் நண்பர்கள் கூறினாலும் அவற்றை பெற்றோரிடம் தெரிய படுத்த சொல்லி கொடுக்க வேண்டும்.

4 பெற்றோரை தவிர வேறு யாரும் குழந்தையின் அந்தரங்க பகுதிகளை தொட்டால், அவர்கள் பெற்றோரிடம் சொல்லக் கூடாது என மிரட்டினாலும், என்ன பொருட்களை வாங்கி கொடுத்தாலும் மறைக்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என அவர்களுக்கு ஆரம்பத்திலேயே தெரிய படுத்த வேண்டும். குழந்தைகளை திட்டாமல் ஆதரவாக பேசி புரிய வைத்தால், அவர்கள் உங்களிடம் எதையும் மறைக்க மாட்டார்கள்.

5 குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போதே அம்மா, அப்பா பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை சொல்லி தர வேண்டியது அவசியம்.

6 குழந்தை பேச துவங்கவில்லை என்றால், மேலே குறிப்பிட்ட தகவல்களை பேப்பரில் எழுதி குழந்தைகளின் ஆடைகளில் வைக்கலாம்.

6 வீட்டின் முன்பகுதிதான் என்றாலும், யாரும் இல்லாத நேரத்தில் நடப்பது, தனிமையில் விளையாடுவது பாதுகாப்பானது இல்லை. எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.

7 கூட்டத்தில் எங்கேனும் தொலைந்துவிட்டால், அம்மா – அப்பாவைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டாம். காணாமல் போன அந்த இடத்திலேயே பாதுகாப்பான பகுதியில் நின்றுகொள்ள வேண்டும். அப்போதுதான், பெற்றோர் தேடி வரும்போது எளிதில் கண்டறிய முடியும். அருகில், குழந்தையுடன் பெற்றோர் யாராவது சென்றால் அல்லது காவலர்களிடம், குழந்தைகளை உதவி கேட்கச் சொல்லலாம்.

Leave a Reply

%d bloggers like this: