கர்ப்பிணிகளின் தூக்கமின்மைக்கான 7 காரணங்கள்

உறக்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான அற்புதமான ஒன்று. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் சில அவர்களை சிரமப்பட வைக்கும். அதில் ஒன்று தான் கர்ப்பகாலத்தில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை. அதிலும் நிறைமாத கர்பிணிப் பெண்களே இதனால் மிகவும் அவதிப்படுவார்கள். இது குழந்தை பிறப்பு வரை தொடர கூடிய ஒன்று. தலைப் பிரசவம் என்றால் கொஞ்சம் திரும்பினால் கூட குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயமும் அவர்களை தூங்க விடாமல் செய்யும். இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மைக்கான 7 காரணங்களை பற்றி பார்க்கலாம்.

1 தூங்கும் நேரம்

கர்ப்பகாலத்தில் தூக்க நேரத்தில் பிரச்சனைகள் மற்றும் மாறுதல்கள் ஏற்படும். பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மதியம் மற்றும் மாலை வேளைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் தூங்குவார்கள். அவர்களது இரவு தூக்கம் பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணம் தான்.

2 செரிமான பிரச்சனை

பெண்களுக்கு கர்ப்பம் தரித்த முதன்மை காலத்தில் குமட்டல் ஏற்படும். அப்போதிலிருந்தே குடல் இயக்க திறனில் சிறிய குறைபாடு ஏற்பட்டு, செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் நெஞ்செரிச்சல், வாயு கோளாறு போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படும். இதை தவிர்க்க சரியான காய்கறி, பழங்கள் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

3 சிறுநீர் பிரச்சனை

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குடல் இயக்க பிரச்சனை ஏற்படுவது சாதாரண ஒன்று. உடல் எடை, மன அழுத்தம் போன்ற காரணத்தினால், அவ்வப்போது சிறுநீர் வந்துக் கொண்டே இருக்கும். அவர்கள் குடிக்கும் நீரின் அளவு அதிகரிப்பதும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணம். இதுவும் அவர்களின் தூக்கத்தை பாதிக்கும் ஒரு காரணி.

4 தாய்மார்களின் பயம்

இதற்கெல்லாம் மேல், முதன்மை காரணமாக கருதப்படுவது பிரசவம் குறித்த தாய்மார்களின் பயம் என்று கூறுகிறார்கள். இதற்கு கருவில் வளரும் சிசுவின் மேல் தாய் வைத்திருக்கும் அன்பும் கூட ஓர் காரணம். தன்னால் சிசுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற தாயின் அக்கறை தான் மாதங்கள் கூட தூக்கத்தை தொலைக்க அவளை தூண்டுகிறது.

5 குழந்தை வளர்ச்சி

வாரங்களில் குழந்தையின் வளர்ச்சியால் வயிறு பெரிதாக ஆரம்பிக்கும். வயிறு பெரிதாக இருப்பதால் அவர்களால் சௌகரியமாக படுத்து உறங்க முடியாது. திரும்பி படுக்கும் போது குழந்தைக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ என்கிற பயமும் அவர்களின் தூக்கத்தை கலைக்கும் ஒரு காரணியாகிறது.

6 குறட்டை

திடீரென உடல் எடை அதிகரிப்பதால் குறட்டை பிரச்சனை ஏற்படும். இது சாதாரணமான ஒன்று என்றாலும், கர்ப்பிணி பெண்கள் தூக்கமின்றி தவிப்பதற்கு இதுவும் கூட ஓர் காரணமாக இருக்கிறது

7 குழந்தையின் அசைவு

தாய் அசையாமல் இருக்கும் போது, கருப்பையில் வளரும் கரு அசைய விரும்புமாம். அதிலும் தூங்கும் வேளைகளில் தான் கால்களை மட்டும் கைகளை அசைப்பது போன்றவற்றை செய்வார்களாம். இதுவும் கூட ஓர் காரணமாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

%d bloggers like this: