குழந்தைகளுக்கு மாம்பழம் தரும் 6 நன்மைகள்..!

மாம்பழம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த பழம். இந்த பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரத் தொடங்கும். இது பழங்களின் ராஜா..! இந்த பழ ராஜா, உங்கள் வீட்டின் குட்டி ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும் ஏகப்பட்ட நன்மைகளை அள்ளித் தருகிறது. அப்படி என்ன நன்மைகளை குழந்தைகளுக்கு அளிக்கிறது என்பதை இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

1. நோய் எதிர்ப்பு திறன்..!

மாம்பழங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுகின்றன. இவற்றை அதிகப்படியாக குழந்தைகள் உட்கொள்ள நேர்ந்தால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். ஆகையால், அளவாக அளித்து ஆரோக்கியம் பெற வைக்கவும்..!

2. புற்றுநோய்..!

மாம்பழங்களை நன்கு உண்டால், அது உடலில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. இரத்த புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற அனைத்து புற்றுநோய் வகைகளையும் தடுத்து, உடலிற்கு ஆரோக்கியத்தினை அளிக்கிறது.

3. குறைந்த கொழுப்பு…

மாம்பழங்களில் குறைவான கொழுப்புச் சத்துக்களே உள்ளன. இவை உடலின் எடையை அதிகரித்து, குண்டாக்காது, ஆரோக்கியம் அளிப்பவையாக உள்ளன.

4. கர்ப்ப காலம்..!

கர்ப்ப காலத்தில், பெண்கள் மாம்பழம் உண்டால், அது தாய்க்கும் சேய்க்கும் பெரு நன்மையை பயக்கும். இது இரும்பு, வைட்டமின் எ, சி, பி6 போன்ற சத்துக்களை கொண்டுள்ளதால், இச்சத்துக்களை கர்ப்பிணி உடலிலும், குழந்தையின் உடலிலும் அதிகரிக்கின்றன.

5 .ஆரோக்கிய உடலுறவு..!

இந்த பழம் ஆரோக்கியமான அப்ப்ரோடிஸியாக் ஆக வேலை செய்து, உடலுறவினில் மகிழ்வுடன் ஈடுபடச் செய்கிறது. உடலுறவில் ஈடுபடும் முன் தம்பதியர் மாம்பழத்தை உண்டு ஈடுபட்டால், அதிக இன்பத்தை பெறலாம்.

6. கண் பார்வை..!

மாம்பழங்களில் உள்ள வைட்டமின் ஏ குழந்தைகளின் கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. ஆகையால், தினசரி இதனை குழந்தைகளுக்கு அளிப்பது நல்லது..!

Leave a Reply

%d bloggers like this: