தவிர்க்க வேண்டிய 9 உடல் எடை குறைப்பு வழிமுறைகள்

இன்றயைக் காலக்கட்டத்தில் நமது உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பூச்சி கொல்லி மருந்துகளின் கலப்பு மற்றும் உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் போன்றவற்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினர் உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்ற பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். ஆனால் அவற்றுள் சில உடல் எடையை குறைக்காமல் பக்க விளைவை ஏற்படுத்துகின்றன. இங்கு கட்டாயம் பின்பற்றக்கூடாத உடல் எடைக்குறைப்பு வழிகளை பார்க்கலாம்.

1 மாத்திரைகள்

உடல் எடையை குறைக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. அவை உங்கள் உடல்நல ஆரோக்கியத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

2 சைவ உணவுகள்

அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்வதால் உடல் எடை குறையாது. உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யும் போதே, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். வெறும் பச்சைக் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு உடல் எடை குறைக்கலாம் என்று நினைப்பது தவறு.

3 அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி மற்றும் குறைவான உணவு என்பது உடல் எடையை குறைக்க சரியான வழியல்ல. ஆரோக்கியமான உணவுடன், அளவோடு உடற்பயிற்சி செய்வதே பயன் தரும்.

4 தண்ணீர் மட்டும் குடித்தல்

தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைக்கலாம் எனும் முறையை கேள்விப்பட்டு நீங்கள் பின்பற்றி இருக்கலாம். உணவை உண்ணாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பது வயிற்றில் இருக்கும் காலி இடத்தை நிரப்புமே தவிர கலோரிகளை எரிக்காது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பயன் தராது.

5 பழச்சாறு

பழச்சாறுகளை மட்டும் எடுத்து கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிக்க கூடாது. உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். பழச்சாறு உடலில் உள்ள நச்சுக்களை மட்டுமே வெளியேற்றும்.

6 கார்போஹைட்ரேட்டை தவிர்த்தல்

உணவில் கார்போஹைட்ரேட்டை தவிர்த்தால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது. உங்கள் உடல் ஆரோக்கியம் குறைந்து, உடல் சோர்வு ஏற்படும். கார்போஹைட்ரேட்டை அளவோடு உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

7 சாலட்

உணவு கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்றுபவர்கள், உடல் எடையை குறைக்க சாலட் மட்டுமே சாப்பிடுவார்கள். உடல் எடை குறைய சாலட் மட்டும் சாப்பிடாமல், குறைந்த அளவு புரதத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

8 இனிப்புகளைத் தவிர்த்தல்

இனிப்புகளை தவிர்ப்பதால் உடல் எடை குறையும் எனும் கருத்து பரவலாக காணப்படுவதால், பலர் இனிப்பை தவிர்த்து வருகிறார்கள். இனிப்பு பண்டங்களையும் மிட்டாய்களையும் குறைவாக எடுத்துக் கொண்டு வேண்டுமென்றால் தவிர்க்கலாம். ஆனால் டார்க் சாக்லேட்களில் பல உடல்நல பயன்கள் அடங்கியிருப்பதால் அதனை தவிர்க்க வேண்டாம்.

9 நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகள் குறிப்பிட்ட அளவிலான ஆற்றலை உங்களுக்கு அளிக்கும். அது செரிமானம் ஆகவும் உதவ கூடியது. ஆனால் வெறும் நார்ச்சத்து உணவுகளை மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையாது.

Leave a Reply

%d bloggers like this: