மகிழ்ச்சியான அன்னையாக இருக்க உதவும் 4 வழிகள்..!

ஒரு பெண் மணமாகி வந்தபின் கணவரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து வாழ ஆரம்பித்து, சில நேரம் தன்னுடைய கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை இழக்கிறாள்; தாயான பின் தன்னையே இழந்து, குடும்பத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கிறாள். இவ்வாறு மற்றவர்களுக்காக வாழ்ந்து வாழ்ந்து தான் யார்? தனக்கு என்ன வேண்டும், வாழ்க்கை இலட்சியம் என்ன அனைத்தையும் மறந்து விடுகிறாள்; இந்நிலை பல சமயங்களில் பெண்களை மன வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இந்த வருத்தங்களின்றி பெண்கள் தாயான பின்னும் மகிழ்ச்சியாக வாழ கீழ்க்கண்ட வழிகள் உதவுகின்றன. அவ்வழிகள் என்னவென்று பதிப்பினை படித்து அறிவோம்..! 

1. நேரம்..!

மற்றவர்களை கவனிக்க எந்த அளவுக்கு நேரம் ஒதுக்கிறீர்களோ, அதே அளவுக்கு உங்களை கவனித்துக் கொள்ள என்று நேரம் ஒதுக்குங்கள். நன்றாக சாப்பிடுங்கள், உங்களுக்கு பிடித்த செயல்களை அந்நேரத்தில் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சரியான திசையில் தான் செல்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்..

2. தோற்றம்..

பெண்களே நீங்கள் எத்தனை வயதை எட்டினாலும், உங்கள் தோற்றத்தை மதிக்கத்தக்க வகையில் வைத்துக் கொள்ளுங்கள்.. நல்ல தகுந்த ஆடைகளை அணியுங்கள்; முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

3. நண்பர்கள்..

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்கள் மற்றும் நெருங்கிய தோழர்களை சென்று பார்த்து, பேசி மகிழுங்கள். உங்கள் வாழ்க்கை எப்படி செல்கிறது நண்பர்கள் வேள்வி எவ்விதம் நகர்கிறது என்று யோசித்து பாருங்கள்; நீங்கள் வாழ்வில் பின் தங்கி இருந்தால் என்ன காரணம் என்று யோசியுங்கள்; வாழ்வில் முன்னேறி இருந்தால், அதற்கான காரணத்தை விட்டுவிடாதீர்கள்.

4. குறிக்கோள்..!

உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோள் கொண்டிருந்தால், அதை அடையும் வழி என்ன என்று சிந்தித்து திட்டமிட்டு செயலாற்றுங்கள். எப்பாடு பட்டேனும் உங்கள் வாழ்க்கைக் கனவினை எட்டிப் பிடிக்க முயலுங்கள்..!

Leave a Reply

%d bloggers like this: