அன்னை செய்யும் 5 அற்புதங்கள்..!

இவ்வுலகில் சிறந்தவர் யார் என்றால், அதற்கு பதில் அன்னையே! அன்னைகளால் மட்டுமே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, குழந்தைகளுக்கும் குடும்பத்தார்க்கும் வேண்டிய பணிவிடைகளை முகச்சுளிப்பு இல்லாமல், பாசத்தோடு செய்ய இயலும். இவ்வாறு பணிவிடைகள் செய்யும் உங்கள் அன்னைக்கு என்றேனும் நன்றி கூறியதுண்டா? அன்னைகள் செய்யும் அற்புத செயல்களை பற்றி இந்த பத்தியில் காணலாம்..!

1. சூப்பர் சுத்தம்..!

வீட்டின் தரையில் தொடங்கி, பாத்திரங்கள், வீட்டிலுள்ளோரின் துணிகள் வரை அனைத்தையும் கழுவி, துவைத்து, காயவைத்து மிகச் சுத்தமாக மாற்றித் தரும் அன்னையின் செயலை என்றேனும் பாராட்டியதுண்டா?? அவரை வேலைக்காரி போல் வேலை வாங்குகிறோமே தவிர ஒருமுறை கூட நன்றி தெரிவித்ததில்லை..!

2. பொறுமைசாலி..!

வீட்டில் உள்ள அனைவரின் பிரச்சனைகளையும் பொறுமையாக செவி கொடுத்து வினவி, அவர்க்கு வேண்டியது செய்வாள் அன்னை; அவள் செய்த அற்புத தூய்மையிலோ சமையலிலோ நீங்கள் கூறும் குறைகளை, நீங்கள் கோபப்படுவதை, எரிந்து விழுவதை மிகப் பொறுமையுடன், புன்னகையுடன் ஏற்பாள்.., அம்மா. உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால், உதவ முதல் ஆளாய் முன் வந்து நிற்பாள் அன்னை. இப்படிப்பட்ட அன்னையின் பொறுமைக்கு என்றேனும் நன்றி கூறியதுண்டா?

3. தேடலின் தெய்வம்..

உங்கள் பொருள் ஏதேனும் தொலைந்துவிட்டால், லேசாக தேடிவிட்டு உடனே ‘அம்மா’ என்று கூச்சலிடுவீர்; அம்மாவின் உதவியை நாடுவீர். நீங்கள் தொலைத்ததை அரை நொடியில் கண்டுபிடித்து கொடுத்துவிடுவார் அன்னை. இதற்கு அன்னைக்கு நன்றி தெரிவித்ததுண்டா?

4. விடிவெள்ளி..!

வீட்டிலுள்ள அனைவரின் தேவையையும் கவனித்துவிட்டு, கடைசியாக உண்டு உறங்கச் சென்று, அனைவர்க்கும் முன்னதாக எழுந்து மீண்டும் அனைவரின் தேவைகளையும் கவனிக்கத் தொடங்கும் அன்னையை என்றேனும் கவனித்ததுண்டா? உதவியதுண்டா?

5. மனதை படிப்பவர்..

நீங்கள் பசியாக உள்ளீரா? குழப்பமாக உள்ளீரா? வருத்தமா, சந்தோசமா என நீங்கள் கொள்ளும் உணர்வுகளை, வாய் திறந்து பகிரும் முன்னரே, அறிவாள் அன்னை..! சாப்பாடு என்று கேட்கும் முன்னரே, தட்டில் சாதம் வைத்து ஊட்டிவிடுவாள் உங்கள் அன்னை.. அவளே சிறந்தவள்..!அன்னைக்கு இணை யாருமில்லை..!

Leave a Reply

%d bloggers like this: