காதலர் தினம் என்றாலே, தம்பதியர்களுள் உற்சாகம் ஊற்றெடுக்கும்; ஏனெனில் திருமண பின் வரும் காதலர் தினங்களில், கணவர் காதலராய் மாறுவார். அந்நாளில் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி காதல் ஒன்றே அவ்விரு உள்ளங்களையும் ஆட்சி செய்யும்..! இத்தகைய காதலர் தினத்தில், மனைவிக்காக கணவர் செய்யும் அந்த ஆச்சரியமூட்டும் செயல்கள் என்னென்ன என்று பதிப்பினை படித்து அறிவோம்..!
1. உணவு.!
அன்றைய நாளில், தினம் தினம் சமைக்கும் மனைவிக்கு ஓய்வளித்து தானே சமைத்து அவளை அசத்துவார்; இல்லையேல், உங்களுக்கு பிடித்த உணவுகளை பிடித்த இடத்திலிருந்து வாங்கி வந்து அளித்து மகிழ்விப்பார்.
2. மசாஜ்..!
வழக்கமாக மனைவி தான் கணவருக்கு முதுகு தேய்த்து விடுவார். இந்நாளில் இது தலைகீழாய் மாறி, மனைவிக்கு கணவர் முதுகு தேய்ப்பது, மசாஜ் செய்வது என பணிவிடைகள் செய்து மனைவியை மகிழ்விக்கலாம்.
3. வீட்டு வேலைகள்..!
உங்களுக்கு காதலர் தினத்தில், அனைத்து வீட்டு வேளைகளில் இருந்தும் விடுமுறை அளித்து, உங்களுக்கு எல்லையற்ற காதலை வாரி வழங்குவார் உங்கள் கணவர்..
4. படம்..!
உங்களுக்கு பிடித்த சினிமாவை வீட்டிலோ அல்லது திரை அரங்கிலோ காட்டி, உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த முயற்சிப்பார்.
5. பிடித்தவை.!
காதலர் தினம் முழுதும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை பிடித்தவாறு செய்து உங்கள் மனதை குளிர்விப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டிருப்பார்.
6. கை வேலைப்பாடு..!
உங்களுக்கு பிடித்த பொருளை அவரே, கை வேலைப்பாடு கலையை நேர்ந்து, மனம் கவரும் பொருளை, பரிசை செய்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த ஆயத்தமாவார்.
7. நடனம்..!
உங்களைக் கவர நடன பயிற்சிகள் மேற்கொண்டு, உங்களுடன் நடனமாடி மகிழ எத்தனிப்பார், உங்கள் ஆசை கணவர்.
8. பரிசு..!
காதலர் தினத்தில், அவர் மனம் கவர்ந்த காதலியான உங்களை மகிழ்ச்சிப்படுத்த பரிசு மழையை உங்கள் மேல் பொழிவார்..!
9. கடிதம்..!
கல்யாணமான பின்னும் உங்களுக்கு காதல் கடிதம் தந்து, உங்களை மூர்ச்சையடைய செய்வார், உங்கள் அன்புக் காதலர்..!
இப்படி உங்கள் கணவர் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ திட்டம் தீட்டலாம்..! உங்கள் திட்டம் என்ன மனைவியரே..!