குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்..!

என்னதான் குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் அவர்களினுள் உறைந்திருக்கும் பெரிய மனிதத் தன்மையை காட்டிடுவர். அதாவது நாம் குழம்பிக் கொண்டிருக்கும் விஷயத்திற்கு எளிதில் விடையை கூறிடுவர்; குழந்தைகளின் உதவும் குணம் என பல விஷயங்களை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நாம் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

1. மாட்டேன்..!

குழந்தைகள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த விஷயத்தை செய்யவே மாட்டார்கள்; அவர்களுக்கு என்ன தோணுகிறது அதையே செய்வார்கள். நாமும் இப்படி தான் இருந்தோம்; ஆனால் ஏனோ நடுவில் மாறிப்போய்விட்டோம். இவ்விஷயத்தை கற்போம்; பிடித்ததை செய்து வாழ்வோம்..

2. சிரிப்பு..!

குழந்தைகள் கள்ளங்கபடமில்லா சிரிப்பிற்கு பெயர் போனவர்கள். அவர்கள் சிறு சிறு விஷயத்திற்கும் சிரிப்பை வெளிப்படுத்துவார்கள். சிறியவர்களின் இந்த சிறப்பான விஷயத்தை நாம் கட்டாயம் கற்க வேண்டும்.

3. ஆபத்து..

எந்த விஷயம் ஆபத்தானதோ, அதை சற்றும் பயமில்லாமல் செய்து முடிப்பார்கள் செல்லங்கள். இந்த விஷயத்தை கற்றே ஆக வேண்டும்.

4. மகிழ்ச்சி..!

ஏதேனும் வேடிக்கையான விஷயங்களை செய்து தானும் மகிழ்ந்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரே ஜீவன் குழந்தையே! இதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமே!

5. உறக்கம்..!

குழந்தைகள் மனதில் கவலையோ எவ்வித சிந்தனையோ, குற்ற உணர்வோ இல்லை; அதனால் அவர்களால் எளிதில் தூங்கி விட முடிகிறது. நாமும் முடிந்த அளவு நம்முடைய சோதனைகளை சாதனையாக்கி, குழந்தை மனதுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.

6. விளையாட்டு..!

குழந்தைகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவர்; ஆடிய களைப்பில் பசியெடுத்தால், ஆரோக்கியமாக உண்ணவும் செய்வர். இது நாம் கற்க வேண்டிய பழக்கம்.. பசித்துப் புசிக்க வேண்டும். உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி, விளையாட்டு என ஏதேனும் ஒன்றில் ஈடுபட வேண்டும்.

7. உதவி..

யாரேனும் கீழ் நிலையில் இருந்தால், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், குழந்தைகளின் மனது தாங்காது. உடனே அவர்களுக்கு உதவ நினைப்பர். நாமும் இப்படித்தான் இருந்தோம்; இப்பொழுது தான் மாறிப்போய் கொண்டிருக்கிறோம். மீண்டும் பழைய நிலையை எட்டி, மற்றவர்க்கு உதவுவோமாக..

8. மன்னிப்பு..!

நாம் ஏதேனும் தவறு செய்து விட்டு குழந்தைகளிடம் மன்னிப்பு வினவினால், உடனே நம் தவறு மன்னிக்கப்படும். இந்த குணத்தாலேயே குழந்தைகள் தெய்வங்களாக காணப்படுகின்றனர். இந்த பழக்கத்தை நாம் கற்றே ஆக வேண்டும்.

9. வெளிப்படை..!

மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசும் இயல்பு உடையவர்கள் குழந்தைகள். இப்பழக்கத்தை நாம் அவர்களிடமிருந்து கற்றால், வாழ்வில் நேர்மையுடன் ஒளிவு மறைவு இல்லாமல் வாழலாம்..!

வாழ்வில் மாபெரும் வெற்றியை ஈட்ட மேற்கூறிய பழக்கங்கள் அவசியம்..! அவற்றை கற்போம்! வெற்றிவீரர்களாய் திகழ்வோம்..

Leave a Reply

%d bloggers like this: