மனைவியின் கர்ப்ப காலத்தில் கணவர்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

கர்ப்பகாலம் தம்பதிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவர்க்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடியது. தம்பதிகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவர்களுக்குள் இருந்த நெருக்கம் குறைய துவங்கி இருக்கும். குழந்தையை கவனிப்பதில் தம்பதிகள் அவர்களை கவனித்து கொள்வதை மறக்க துவங்கி விடுவார்கள். அவர்களது கவனத்தை கருவில் இருக்கும் குழந்தை ஈர்க்க துவங்கி விடும். தம்பதிகளிடையே நெருக்கம் குறைய துவங்கி இருக்கும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் சில உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களும் இதற்கு காரணமாகின்றன. மனைவியின் கர்ப்ப காலத்தில் கணவர்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

1 நம்பிக்கை

கணவர்கள் மனைவிகளின் நம்பிக்கைக்குரியவர் என்பதை உணர்த்தும் முக்கியமான தருணமாகும். மனைவியின் உடல் மற்றும் மன மாற்றம் ஏற்படுவதால், உங்களது ஆதரவை பெரிதும் எதிர்பார்ப்பார்கள். உங்களை சார்ந்திருந்தால் உங்கள் இருவருக்குமான நெருக்கத்தில் மாயங்கள் நிகழும் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். அப்படி செய்வதற்கு வீட்டில் இருந்து அவரின் தேவையை கவனிக்க வேண்டும், அதே நேரம் வருவாய்க்காக உழைக்கவும் வேண்டும். அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் எனவும், அனைத்து நேரத்திலும் உடனிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பார்கள். இவை உங்களுக்கு சுமையாய் தோன்றினாலும், சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால், மீதமுள்ள வாழ்க்கைப் பயணத்தில் உங்கள் உறவு ஆழமாகவும், மென்மையாகவும் தொடரும்.

2 மாற்றங்கள்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில், ஒரு பெண் அதிகமாக உணர்ச்சிவசப்படுவது இயல்பு தான். தன் உணர்ச்சிகள் மற்றும் அதிருப்திகளை சில நேரத்தில் உங்கள் மீது காட்டலாம். அது தனிப்பட்டு உங்கள் மீது காட்டும் வெறுப்பல்ல. ஒரு வேளை அது உங்களால், நீங்கள் செய்த காரியத்தால் ஏற்பட்ட அதிருப்தி என்றாலும் கூட பரவாயில்லை. அவர் உங்கள் குழந்தையை சுமக்கிறார். அதனால் அவருடைய தேர்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அதனால் உங்கள் மீது அவர் எரிந்து விழும் போது, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அவருக்காக நீங்கள் மாறுவதற்கும் தயாராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

3 இணக்கம்

உங்கள் மனைவி ஒரு நாள் மிக உணர்ச்சி வசப்படலாம். மறுநாள் முழுமையாக மாற்றி நடக்கலாம். ஏன் அடுத்த சில மணிநேரங்களிலேயே கூட அவரின் மனநிலை மாறலாம். முன்கூட்டியே உண்டான எண்ணங்களை ஓட விடுங்கள். அவர் தற்போதுள்ள மனநிலைக்கு ஏற்ப அன்பு காட்டும் வகையில் அவரை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தற்போது சரியாக நடந்தது அடுத்த முறை நடக்க வேண்டும் என்றில்லை. அதனால் தொடர்ச்சியான முறையில் ஆராய்ந்து, அதற்கேற்ப இணங்கி நடந்து கொள்ளுங்கள். அவருடைய மாற்றங்களை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அவரை கையாளுங்கள்.

4 பணம்

மனைவியை பார்த்துக் கொள்வது அவசியம் தான். அதோடு சேர்த்து பணம் சார்ந்த விஷயத்திலும் அவருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டு செலவுகளை பார்த்துக் கொள்வது மற்றும் தேவையானவற்றை வாங்குவது போன்ற பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பணத்தை சரியான முறையில் செலவிட்டு குடும்பத்தை வழிநடத்த கற்றுக் கொள்ள வேண்டும். பணத் தேவையில் பிரச்சனை இல்லை எனும் போது, அவருடைய மன அழுத்தம் ஓரளவிற்கு குறைந்து விடும்.

5 சிறந்த துணை

அவர்களது வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல், வேலைகளை செய்து கொடுத்து ஓய்வு பெற செய்தல் போன்றவற்றை செய்யலாம். தழுவுதல், காதலித்தல், விஷேச அக்கறை போன்றவைகள் எல்லாம் இதற்கான தொடக்க புள்ளிகளாகும். மாதாந்திர பரிசோதனை, காலை அல்லது மாலை நேர நடைப்பயிற்சிக்கு அழைத்து செலுத்தல் போன்றவற்றை செய்யலாம். அவருக்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் எப்போதும் ஆதரவாகவும் சிறந்த துணையாகவும் இருப்பதை மனைவி உணர்ந்தால், உங்கள் உறவு சிறப்பாக அமையும்.

உங்கள் மனைவி முதல் முறை கர்ப்பமாகும் போதும், அந்த மாற்றத்தின் போதும், அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உறவை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

Leave a Reply

%d bloggers like this: