மாமியார் மனதைக் கவரும் வழிகள்..!!

திருமணம் பெண்களுக்கு கிடைத்த புதிய பந்தம். திருமணம் ஒரு பெண்ணை புதிய வாழ்க்கைக்கு அழைத்து செல்கிறது. புதிய வீட்டிற்கும் தான். தனது உறவினர்கள், உயிர் நண்பர்கள் என அனைவரையும் விட்டு, புதிய உறவுகளை தேடி அவள் செல்கிறாள். இந்த தருணத்தில் வாழ்வில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உறவுகளை பற்றி புரிந்து நடந்துகொள்ள சில காலம் ஆகும்.  

பெண்களுக்கு இது சற்று கடினமான தருணம் தான். இதனால் தான், திருமணமாக போகும் பெண்களுக்கு தாய் புகுந்த வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சில அறிவுரைகளை கூறுவார். அவர்களது திருமணமான தோழிகளும் சில அறிவுரைகளை கூறுவார்கள். இங்கு புதிதாக திருமணமாகப்போகும் பெண்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  

மாமியாருக்கு உதவி 

அதிகாலையிலேயே எழுந்து உங்கள் தினசரி வேலைகளை முடித்து, குளியுங்கள். உங்கள் மாமியாருக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள். உங்களது அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அழுக்கான ஆடைகளை லாண்டரி பக்கெட்டில் போடுங்கள். 

ஆரோக்கியம்

காலை உணவை சீக்கிரம் சமைத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறிவிட்டு நீங்களும் நேரத்திற்கு சாப்பிடுங்கள். பிறகு மதிய உணவை சமைக்க தொடங்குங்கள். பருவநிலைக்கு தகுந்தது போல உங்களுக்கு பிடித்த உணவுகளை சமையுங்கள். 

கணவருக்கும் நேரம்

உங்களது கணவரின் உறவினர்களை கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிடாமல், கணவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால் அது அளவுடன் இருக்கட்டும் உங்கள் சுயத்தை இழந்து எதையும் செய்ய வேண்டாம். 

வேலைகளை பகிர்தல் 

நீங்களும் ஒரு மனிதர் தான் என்பதை மறந்து எல்லா வேலைகளையும் நீங்களே செய்து கொண்டு இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள். விட்டுக்கொடுங்கள் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையாக நடந்துகொள்ளாமல், உங்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுங்கள். 

கணவரது சந்தோஷம் 

உங்கள் கணவரை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். உடலுறவு என்பது அவசியம் என்பதால் உங்களது ஆரோக்கியத்தை அதற்காக தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனை இருந்தால் உங்களது கணவரிடம் அதை பற்றி பேசுங்கள். 

குடும்பத்தினருக்கு நேரம் 

உங்களது குடும்பத்தினருடன் சிறிது நேரத்தை செலவு செய்யுங்கள். குறைந்தது ஒருவேளை உணவையாவது அனைவரும் ஒன்றாக சாப்பிடுங்கள். இது உறவுகளுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும். 

முழுமையாக சார்ந்திருக்க வேண்டாம் 

உங்களது அனைத்து தேவைகளுக்கும் உங்கள் கணவரது குடும்பத்தினரையும் உங்கள் கணவரையும் முழுமையாக சார்ந்து இருக்காதீர்கள். சண்டைகள் வேண்டாம் சின்ன சின்ன விஷயங்களுக்கு அற்ப தனமாக சண்டை போடுவதை விடுங்கள். நீங்கள் பிறகு மன்னிப்பு கேட்டாலும், அந்த நினைவுகள் நீங்காது. சுதந்திரமாக இருங்கள். ஆனால் அது உங்கள் குடும்பத்தின் மரியாதையை பாதிக்காத விதம் பார்த்துக்கொள்ளுங்கள். 

சகிப்பு தன்மை 

திருமணத்தில் எப்போதும் 50-50 ஆக இருந்துவிடுவதில்லை. சில சமயம் 75-25 ஆக இருக்கும் எனவே அதை புரிந்து கொண்டு நடந்துகொள்ளுங்கள். உங்கள் கணவருக்கு அவர் விரும்பியதை செய்ய சற்று நேரம் கொடுங்கள். அவரது வேலை நேரத்தில் தொந்தரவு செய்யாதீர்கள்.

Leave a Reply

%d bloggers like this: