கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதுவும் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு ஏற்ப பெண்களின் உடலில் மாற்றங்கள் உண்டாகும். அதில் சில மாற்றங்கள் உடலின் வெளிப்புறத்திலும், இன்னும் சில உட்புறத்திலும் ஏற்படும். இங்கு ஒன்பது மாத காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.  

சுவாச மண்டலத்தில் மாற்றங்கள் 

கர்ப்ப காலத்தில் சுவாசத்தின் விகிதம் அதிகரிக்கும். ஏனெனில் குழந்தை வளரும் போது, குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாயின் சுவாச விகிதம் மாறுபடும். சில நேரங்களில் மூச்சுத்திணறலைக் கூட சந்திக்க நேரிடும். 

சிறுநீர் அமைப்புகளின் மாற்றங்கள் 

கருப்பை விரிவடையும் போது, சிறுநீர்ப்பையில் சற்று அழுத்தம் அதிகரிக்கும். மேலும் சிறுநீரகங்களும் கழிவுகளை வெளியேற்றுவதில் சிரமத்தை சந்திக்கும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். 

இதய அமைப்பில் மாற்றம் 

குழந்தை வளர்வதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். மேலும் இரண்டாவது மூன்று மாத காலத்தில் இரத்த அழுத்தம் குறையும். 

அடிவயிற்றில் மாற்றம் 

குழந்தை வளர வளர சில பெண்கள் அடிவயிற்றுப் பகுதியில் வலியை உணர்வார்கள். இன்னும் சில பெண்களுக்கு முதுகு வலி ஏற்படும். 

நாளமில்லா அமைப்புக்களில் மாற்றம் 

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், இக்காலத்தில் உடற்செயலிய அளவு அதிகமாக இருக்கும். சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகுந்த வெப்பத்தை உணர்வார்கள். 

இரைப்பை குடல் அமைப்பில் மாற்றம் 

கருப்பை சற்று பெரிதாகும் போது, இரைப்பை குடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, நெஞ்செரிச்சலை சந்திக்கக்கூடும். சில பெண்களுக்கு, மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. 

மார்பகம் 

உடல் புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும் போது, மார்பகங்கள் மிகவும் மென்மையாகும். மேலும் மார்பகங்களின் அளவும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப பெரிதாகும். 

இதர மாற்றங்கள் 

கர்ப்ப காலத்தில் வரித்தழும்புகள் ஏற்படும். ஹார்மோன்களால் நகம் மற்றும் தலைமுடியில் கூட வளர்ச்சி ஏற்படும். சில பெண்களுக்கு கால்கள் வீக்கமடையும் மற்றும் உடல் வெப்பம் அதிகரிக்கும்.

Leave a Reply

%d bloggers like this: