குங்குமப்பூ பற்றிய இரகசியம்..!

இந்தியாவில் குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் குடிப்பது என்பது பொதுவான ஒன்றாகும். ஏனெனில் பால் மற்றும் குங்குமப்பூ பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு நல்லது. இது தாய் மற்றும் குழந்தை இரண்டு பேருக்குமே மிகவும் நல்லதாகும். இந்த குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிறக்கும் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

உண்மை தானா? 

கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக குங்குமப்பூ கலந்த பாலை குடிக்க வேண்டும் என்ற பல இந்திய குடும்பங்கள் கூறுகின்றன. உண்மையாகவே குங்குமப்பூ பால் குடித்தால் பிறக்கும் குழந்தை நல்ல நிறமாக பிறக்குமா? இது வெறும் கட்டுக்கதை தான். ஆனால் பாலும், குங்குமப்பூவும் உண்மையிலேயே மிகவும் ஆரோக்கியம் நிறைந்தவையாகும்.

குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் பருகுவது மிகச்சிறந்த யோசனையாகும். ஆனால் நீங்கள் குங்குமப்பூ கலந்த பாலை பருகுவதன் மூலமாக மட்டுமே குழந்தை சிவப்பாக பிறக்காது.

பால் 

பால் மிகவும் சத்துள்ள பொருளாகும். கர்ப்ப காலத்தில் பால் பருகுவது மிகவும் நல்லதாகும். பாலில் கால்சியம் மற்றும் புரோட்டின் அதிகளவில் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்ததாகும்.

குங்குமப்பூ 

குங்குமப்பூ கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல கொழுப்பை கொடுக்கிறது. இது மூளையை சிறப்பாக இயங்க வைக்கிறது. இருதய நலனுக்கு மிகவும் நல்லதாகும் மேலும் இது பல நல்ல ஆரோக்கிய நலன்களை கொடுக்க வல்லது.

மரபு

குழந்தையின் நிறைத்த எந்த ஒரு உணவுகளாலும் மாற்ற முடியாது. குழந்தையின் நிறம் என்பது தாய், தந்தை, மூதாதையர்களை சார்ந்ததாகும்.

ஆரோக்கியம் 

எனவே நீங்கள் குழந்தையின் நிறத்தை மேம்படுத்த வேண்டும் என்று குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் அது உங்களுக்கு உதவாது. கால்சியம், புரோட்டின் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவை என்றால் அது இதன் மூலம் நிச்சயமாக கிடைக்கும்.

Leave a Reply

%d bloggers like this: