குழந்தைகளை தனியாக விட்டு செல்லும் போது கவனிக்க வேண்டியவை

கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை சரிவர நிர்வகிக்க முடியும் எனும் கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தைகளின் பள்ளி விடுமுறை நாளில் பெற்றோருக்கு விடுப்பு கிடைப்பது சிரமமான ஒன்று. அப்போது குழந்தைகளையும் உடன் அழைத்து செல்ல இயலாமல் இருக்கும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டு செல்லும் நிலை ஏற்படும். அப்பொழுது என்னமாதிரியான சங்கடங்கள், சிக்கல்கள் ஏற்படும் என்பதை யாராலும் உணரமுடியாது. எனவே குழந்தைகளை தனியாக விட்டுச்செல்லும் போது கவனிக்க வேண்டியவற்றை பார்க்கலாம்.

1 பூட்டு

குழந்தைகள் தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. திடீர் நிலநடுக்கமோ, தீ விபத்தோ ஏற்படும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்த்தை ஏற்படுத்தும். அது போன்ற சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லலாம்.

2 சமையலறை

வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால், குழந்தைகள் சென்று விளையாடும் இடம் சமையலறைதான். எனவே முதலில் சமையலறை கதவை பூட்டுங்கள். குழந்தைகளுக்குத் தேவையான உணவுகளை ஹாட் பாக்ஸ்சில் போட்டு மேஜை மேல் வைக்கவும். அவர்களுக்கு தேவையான தண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவைகளை தனியாக எடுத்து வைக்கவும். இதனால் குழந்தைகள் சமையலறைக்கு போக வாய்ப்புகள் ஏற்படாது.

3 பயிற்சி

தனியாக இருக்க நேரும்போது தாங்களாகவே கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் இருப்பது குறித்தும். சங்கடங்கள் ஏற்படும்போது அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

4 அவசரகால தொலைபேசி எண்கள்

தீ போன்ற ஆபத்து காலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய அவசர எண்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்த வேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரையாவது நியமித்திருந்தால் அவர்களுக்கு கட்டாயம் அவசரகால தொலைபேசி எண்களை தெரிவித்திருங்கள் அல்லது வீட்டில் எங்காவது குறித்து வைத்து இடத்தை தெரிவியுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் அவசரகால எண்களை தெரிவிப்பது அவசியம்.

5 தொலைக்காட்சி

குழந்தைகள் தனியாக இருக்கும் தருணங்களில் தொலைக்காட்சியோ, கணினியோதான் அவர்களுக்கு பொழுதுபோக்கு. பெரியவர்கள் இல்லை என்றால் அவர்கள் இஷ்டம்தான். எனவே கண்டதையும் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட சேனல்களை மறைத்திடுங்கள். அது குழந்தைகளின் நலனுக்கு பாதுகாப்பானதும் கூட.

Leave a Reply

%d bloggers like this: