தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும் வித்தியாச உணவுகள்..!

சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சத்துவாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது…! இந்த பகுதியில் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும் உணவு வகைகளை பற்றி காணலாம்.

1. பாகற்காய்

கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய், கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். இதன் சுவை என்னவோ கசப்பாக இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ குணங்கள், இந்த காயில் அடங்கியுள்ளது. பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

மேலும் பாகற்காயை உணவில் சேர்த்தால், இது பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது. குடற்புழுக்களை போக்க பாகற்காயை உண்ணலாம். இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.

2. ஆலம் விழுது 

ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் அளவு பாலில் காய்ச்சி உண்டால், தாய்பாலில்லாத பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் உற்பத்தியாகும்.

3. அருகம்புல் சாறு

அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். இது இரத்த சோகையை நீங்கி, இரத்தத்தை அதிகரிக்கும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்க இது உதவுகிறது. வயிற்றுப் புண்களை நீக்கவும் இது உதவியாக இருக்கும்.

4. நிலப்பூசணி 

தாய்ப்பாலை அதிகரிக்க, நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை கலந்து சாப்பிட வேண்டும்.

5. காட்டாமணக்கு இலை 

காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். இந்த இலை கிராமப் பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும்.

6. கோவை இலை 

கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். கோவை இலையும் கிராமப் புறங்களில் அதிகளவில் கிடைக்கும். இந்த கொடியானது முற்களின் மீது கூட படர்ந்து காணப்படும்.

7. முருங்கை கீரை 

முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

8. பூண்டு பால் 

தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

Leave a Reply

%d bloggers like this: