நாப்கின்கள் vs மாதவிடாய் கப்கள்..!

பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய நாப்கின்களுக்காக பல நூறு ரூபாய்களை செலவு செய்கின்றனர். இந்த நாப்கின்கள் பெண்களுக்கு வசதியானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் உள்ளது. ஆனால், இன்றைய நவீன யுக பெண்கள் தற்போது மென்சுரல் கப்களை (menstrual cup) பயன்படுத்தி வருகின்றனர். இது நாப்கின்களை விட சுகாதாரமானதாகும். நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கப்களின் நிறை குறைகளை பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்..!

நாப்கின்கள்..!
கேன்சர்

நாப்கின்களில் உள்ள கெமிக்கல்கள் கேன்சருக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த நாப்கின்களில் பிளாஸ்டிக் உள்ளது. பெண்கள் தங்களது முழு வாழ்நாளில் கிட்டத்தட்ட 6000 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது பல ஆரோக்கிய கெடுதல்களை செய்கிறது. நோய் எதிர்ப்பு தன்மையை குறைக்கிறது. ஹார்மோன்களின் வேலைகளை பாதிக்கிறது, ஒவரியன் கேன்சர் போன்றவைக்கு காரணமாகிறது.

பாக்டீரியா பாதிப்பு

துணி போன்ற மெட்டிரியல்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்துவதால், அந்தரங்க பகுதியில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இந்த காட்டனை சுத்தம் செய்ய வணிக நிறுவனங்கள் டியோசின் (dioxin) என்ற ஒரு கெமிக்கலை பயன்படுத்துகின்றன. இதனால் அங்கு பாக்டீரியாக்களின் வளர்ச்சியானது அதிகமாகிறது. இது சில பெண்களுக்கு அந்தரங்கபகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட ஒரு காரணமாக உள்ளது.

மாதவிடாய் கப்கள்..!
இருப்பது தெரியாது

மாதவிடாய் அதிகமாக இருப்பதாக இருந்தால், அது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும். இதனை 24 மணிநேரமும் பயன்படுத்தலாம். முதல் முறையாக பயன்படுத்துபவர்கள், இரவில் இதனை காலி செய்து, சுத்தம் செய்த பின்னர் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் இந்த மாதவிடாய் கப்களை பயன்படுத்தும் போது ஒரு சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இது சீக்கிரமே பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.

புதிதாக.. 

முதல் முறையாக பயன்படுத்தும் போது சிலருக்கு இது வலியை ஏற்படுத்தலாம். இதனை வெளியே எடுக்கும் போது நீங்கள் வலியை உணரலாம். ஆனால் இது அனைவருக்கும் வலியை உண்டாக்காது. இந்த வலியை குறைக்க நீங்கள் இயற்கையான வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம்.

மாதவிடாயின் போது உண்டாகும் வலியினை குறைக்க தண்ணீர் அதிகமாக குடிப்பது ஒரு மிகச்சிறந்த வழியாகும். வெள்ளரி போன்ற நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை நீங்கள் சாப்பிடுவதன் மூலமாக இந்த வலியை குறைக்கலாம். நன்றாக தூங்கி ஓய்வெடுப்பது என்பது நல்ல நிவாரணியாக இருக்கும். உங்களால் முடிந்த ஒரு சின்ன உடற்பயிற்சியை செய்வதும் நல்லது.

நாப்கினின் குறைகள்

நாப்கின்களில் பிளாஸ்டிக் மற்றும் கெமிக்கல்கள் இருக்கும். இது கேன்சருக்கான வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் இதனால் தொற்றுக்கள், பெண்ணுறுப்பு பகுதியில் அரிப்புகள் போன்றவை உண்டாகும். ஆனால் இப்போது பெண்களிடையே இந்த மாதவிடாய் கப்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.

தொற்றுகள்

பெண்ணுறுப்பு பகுதிகளில் அரிப்பு, தொற்றுகள் போன்றவை ஏற்பட்டால் அது மிகவும் அசௌகரியமான ஒன்றாக இருக்கும். ஆனால் இந்த மாதவிடாய் கப்களை பயன்படுத்துவதன் மூலமாக பெண்களுக்கு தொற்றுகள் எதுவும் உண்டாவதில்லை.

என் இனிய தமிழ் தோழிகளே! நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்..! உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்..! நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்..! சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும்.! பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது..! அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..! 

Leave a Reply

%d bloggers like this: