கர்ப்பகாலம் பற்றிய கட்டுக்கதைகள்..!

தர்பூசணிப்பழம் மிகவும் சுவையானது.. அதிக நீர்ச்சத்துக்களை கொண்டது, இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட, ஆனால் இதனை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாது என்று சிலர் கூறுவார்கள்.. இது உண்மைதானா? தர்பூசணி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது ஆபத்தானதா? எதற்காக இப்படி சொல்கிறார்கள்.. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

கட்டுக்கதை 1: 

கர்ப்ப கால சர்க்கரை நோயானது தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் உண்டாகிறது என்றும் எனவே அதிகளவு சர்க்கரை நிறைந்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் ஒரு கட்டுக்கதை நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் தர்பூசணிப்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக உள்ளது. இது சர்க்கரை நோய் பாதிப்பை அதிகப்படுத்தாது. 10 கப் தர்பூசணிப்பழம் சாப்பிட்டால் தான் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். தர்பூசணிப்பழத்தில் சர்க்கரை இல்லை, ஆனால் இது குளூக்கோஸின் அளவை அதிகரிக்க செய்யும். தினமும் ஒன்று அல்லது 2 கப் தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு எந்த வித கெடுதலும் உண்டாகாது. மாறாக நன்மைகளே கிடைக்கும்.

கட்டுக்கதை 2: 

கருப்பையில் இருக்கும் குழந்தையின் எடை நன்றாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதற்காக குழந்தையின் எடை மிக அதிகமாக இருக்க கூடாது. சிலர் தர்பூசணி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தினை முன் வைக்கின்றனர். ஆனால் இது உண்மை இல்லை. நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை விட தர்பூசணி சாப்பிடுவது கர்ப்ப காலத்திற்கு மிகவும் நல்லது. இதில் 92% தண்ணீர் உள்ளது மீதி, 7.55 % கார்போஹைட்ரைட் உள்ளது. இது கொழுப்பு அற்றது. எடையை கூட்டாது. இரண்டு கப் தர்பூசணிப்பழத்தில் 80 கலோரிகள் மட்டுமே உள்ளது. தர்பூசணிப்பழத்தை சாப்பிடும் போது உடல் எடையை பற்றி யோசிப்பது கடைசியாக தான் இருக்கும்.

கட்டுக்கதை 3: 

தர்பூசணி சாப்பிடுவது உடலை மிகவும் குளிர்ச்சியை உண்டாக்கும். எனவே தர்பூசணியை சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நீர்ச்சத்து என்பது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஒன்று. இரண்டு கப் வரை தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது. ஆனால் காய்ச்சல், சளி உள்ள போதும், குளிர்க்காலங்களிலும் தர்பூசணிப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Leave a Reply

%d bloggers like this: