கர்ப்பகால முடி உதிர்வைத் தவிர்க்கும் 6 சைவ உணவுகள்..!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று தான் முடி உதிர்வு ஆகும். இந்த பிரசவத்திற்கு பின்னரான முடி உதிர்வு பிரச்சனை என்பது பல பெண்கள் சந்திக்க கூடியது தான். கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.

உணவுகள் 

கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கிய சப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. மேலும், நீங்கள் எதை எல்லாம் சாப்பிட்டால் முடி வளரும் என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

பீன்ஸ்  

பீன்ஸில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. அதோடு விட்டமின் பி, சி, கனிமங்களையும் நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பீன்ஸ் வகைகள் அனைத்துமே மிக நல்லது. கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கருப்பு பீன்ஸ் ஆகியவைகள் கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகிறது.

நட்ஸ்

பருப்புவகைகளில் அதிக அளவு புரோட்டின்,விட்டமின், மினரல் உள்ளன.இவைகளை தினமும் உண்டால் டல்லடிக்கிற கூந்தல் டாலடிக்கும் . பாதாம்,பீ நட்ஸ், வால் நட், முந்திரி ஆகியவ்ற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஊற வைத்த பாதாம் மிகவும் நல்லதாகும்.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் , விட்டமின் ஈ, பி மற்றும் சி ஆகியவைகளையும், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுப் பொருட்களையும் கொண்டுள்ளது. இவை முடிகளை வேகமாக வளரவும், கருமையான நிறத்திலும் வளர தேவையான சத்துக்கள். அன்றாடம் உணவில் சேர்க்கக் கூடிய உணவு வகை.

ஓட்ஸ் 

ஓட்ஸில் விட்டமின் பி யும், தாதுப் பொருட்களும் கொண்டுள்ளன. முடி வளரத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. தினமும் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் நாளடைவில் முடி நன்றாக வளர்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.

கேரட் 

கேரட் பீட்டா கரோட்டினைக் கொண்டுள்ளது. அது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. கேரட்டை எவ்வகையிலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஜூஸாகவோ,சாலட்டாகவோ சமைத்தோ, எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். கூடிய மட்டும் பச்சையாக கேரட்டை உண்பது பீட்டா கரோட்டினை உடலுக்கு முழுவதும் கிடைக்கச் செய்கிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு 

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது.அதனை சாப்பிடும்போது கரோட்டின் , விட்டமின் ஏ வாக மாறிவிடும். விட்டமின் ஏ கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானதாகும். சர்க்கரை வள்ளிக் கிழங்கினை வேக வைத்தோ அல்லது வேறு விதமாகவோ சாப்பிடலாம்.

Leave a Reply

%d bloggers like this: