கர்ப்பகாலத்தில் அதிக நன்மை தரும் பழம்..!

கர்ப்ப காலத்தில், தர்ப்பூசணி பழம் உண்பதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நன்மைகளை மூடி மறைக்கும் கட்டுக்கதைகள் பற்றி சென்ற பதிப்பில் கண்டோம். இந்த பகுதியில் கர்ப்பிணிகளுக்கு தர்ப்பூசணி தரும் நன்மைகள் பற்றி படித்தறிவோம்..!

காலை காய்ச்சல்

கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் காய்ச்சல், சோர்வு, வாந்தி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதில் இருந்து விடுதலை பெற்று சோர்வையும் களைப்பையும் போக்க தர்பூசணி மிகவும் உதவியாக இருக்கும்.

உடல் வறட்சி

நீர் என்பது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. போதிய அளவு நீரை குடிக்கவில்லை என்றால் உடலில் வறட்சி உண்டாகிவிடும். இதனை போக்க தர்பூசணிப்பழம் உதவியாக உள்ளது.

 

உடல் வலி

கர்ப்ப காலத்தில் உடலின் பல்வேறு பகுதிகளில் தசைகளில் உண்டாகும் வலிகளுக்கு தர்பூசணிப்பழம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.

 

எலும்பைப் பாதுகாக்கும்!

தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கும்.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.

எடையைக் குறைக்கும்!

இதில் பெருமளவுக்கு நீர்தான் இருக்கிறது. கலோரியும் குறைவு. இதனால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர எடை குறையும்.

 

சருமத்திற்கு…

இதிலுள்ள பீட்டா கரோட்டின் , உடலால் வைட்டமின் ஏவாக மாற்றப்படும். இது முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. இதன் பட்டையைச் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியாமல், தோலில் தடவலாம். இதில் பாக்டீரியாத் தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்னைக்கும் இது நல்ல தீர்வு தரும்.

Leave a Reply

%d bloggers like this: