தாய்ப்பால் சுரப்பு இவ்வுணவுகளால் அதிகமாகும்-தெரியுமா?

சில பெண்கள் தங்களது அழகு குறைந்து விடும் என்று நினைத்து தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு சிந்தனையாகும். இவ்வாறு செய்வதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை எந்த ஒரு உணவும் கொடுத்துவிட முடியாது. அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து படித்ததறிவோம், இப்பதிப்பில்..!

1. பூண்டு 

பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

2. நட்ஸ்!

பாலூட்டும் பெண்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் தருகிறது.

3. கேழ்வரகு 

கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். 

4. பால் 

பால் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது. பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும். 

5. பால் சுறா 

அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

6. பாசிப்பருப்பு 

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

7. பூண்டு பால் 

தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

Leave a Reply

%d bloggers like this: