தாய்ப்பால் சுரப்பு-அதிகரிக்கும் 8 உணவுகள்..!

குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. எனவே தாய்ப்பாலை நிறுத்திவிடாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க வேண்டிய தாய்ப்பால் போதுமான அளவு சுரக்கிறதா? இல்லை என்றால், தாய்ப்பால் சுரக்க உதவும் உணவுகளை உண்ண வேண்டும். அப்படிப்பட்ட உணவுகள் பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்…!

1. பப்பாளி 

பப்பாளி பழங்காலமாக பால் சுரப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளியை ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடுவதன் மூலமாக பால் சுரப்பு அதிகரிக்கும். 

2. ஒட்ஸ் 

நீங்கள் ஓட்ஸ் கஞ்சியை விரும்பி குடிப்பவராக இருந்தால், தாய்ப்பாலை அதிகரிக்க ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸ் கொழுப்பு குறைவான ஒன்று. இது தாய்ப்பாலை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

3. கீரைகள் 

உங்களது உணவில் கீரைகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டியது அவசியம். கீரைகள் தாய்ப்பாலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை மறக்காமல் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

4. கேரட் 

கேரட்டில் அதிகளவு சத்துக்கள் உள்ளன. கேரட்டை நீங்கள் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ, சூப் செய்தோ சாப்பிடுவதால் தாய்ப்பால் அதிகரிக்கும். 

5. முருங்கை 

முருங்கை கீரையை போலவே முருங்கை காய்க்கும் தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை காக்கவும் இது உதவியாக உள்ளது. 

6. தண்ணீர் மற்றும் ஜூஸ் 

தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகள் உங்களது உடலில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கும். உடலுக்கு தேவையான அளவு நீரின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தம் ஓட்டம் சீராகிறது. இது பால் சுரப்பிற்கு உதவியாக இருக்கிறது. 

7. பிரவுன் ரைஸ் 

பிரவுன் ரைஸ் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இது தாய்ப்பால் சுரப்பிற்கான ஹார்மோனை தூண்டி விட்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. பிரவுன் ரைஸை நீங்கள் சமைத்து, இதனுடன் சத்தான காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம். 

8. முட்டை 

முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள், விட்டமின் ஏ, விட்டமின் பி2, பி12, ஒமேகா-3, கால்சியம், பாஸ்பரஸ், மினரல்கள் ஆகியவை உள்ளன. இது குழந்தைக்கு தேவையான அளவு புரதச்சத்தை கொடுக்கிறது. முட்டை தாய்ப்பாலின் அளவை மட்டும் அதிகரிக்காமல் தரத்தையும் அதிகரிக்கிறது. நீங்கள் முட்டை சாப்பிடுவதால் உங்களது குழந்தைக்கு ஒவ்வாமை அதாவது வாந்தி, தடிப்புகள், அசௌகரியம், சுவசப் பிரச்சனை, வாந்தி போன்றவை இருந்தால், நீங்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்த்து விடவும்.

Leave a Reply

%d bloggers like this: