சிசேரியன் பிரசவம்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்..!

பிரசவம் என்பது பெண்கள் மற்றுமே பெற்ற வரப்பிரசாதம்.! பிரசவத்தால், தான் ஒரு புத்தம் புது உயிர் இந்த மண்ணை வந்து அடைகிறது. இத்தகு அற்புத செயலை ஆற்றும் வல்லமையை இறைவன் பெண்களுக்கே கொடுத்துள்ளார். பெண்களுக்கு பிரசவம் இயற்கை முறையிலும், செயற்கை முறையிலும் தற்காலத்தில் நடைபெற்று வருகிறது. 

பெண்களுக்கு நடக்கும் சிசேரியன் குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. சிசேரியன் குறித்த பல கட்டுக்கதைகள், உண்மையான விஷயங்களை மறைத்து, பொய்யாய் மக்கள் மனதில் பதிந்துவிட்டன. ஆகையால், சிசேரியன் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தவே இப்பதிப்பு..! இப்பதிப்பை படித்து, உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்..

1. தேர்வு உங்கள் கையில்…

பிரசவம் என்பது சுகப்பிரசவமாகவும் அமையலாம்; சிசேரியனாகவும் அமையலாம். ஒவ்வொருவரின் உடல் நிலை பொறுத்தே பிரசவ முறை அமைகிறது. பிரசவ நேரம் வலி ஏற்பட்டு, முதலில் தலைக்கு பதிலாக, உடலுறுப்புகள் வெளியே வந்தால் கட்டாயம் சிசேரியன் செய்தெ ஆகவேண்டும். இதுபோல், தவிர்க்க முடியாத நிலையில் சிசேரியன் என்றால் சரியே! ஆனால், நீங்களே முன்வந்து சிசேரியன் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தல் என்பது சரியானதா? யோசியுங்கள் பெண்களே! 

2. ஒருமுறை சிசேரியன் செய்து கொண்டால், மறுமுறை??

ஒருமுறை சிசேரியன் செய்து கொண்டால், மறுமுறை சிசேரியன் மட்டுமே செய்து கொள்ள முடியும் என்று பலர் தவறான கருத்து கொண்டுள்ளனர். ஆனால், உண்மையென்னவென்றால், உங்கள் உடல் நலம் நன்றாக, ஆரோக்கியமாக இருந்தால், முதல் பிரசவம் சிசேரியன் நடந்திருந்தால் கூட, இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவம் மூலம் பெற்றுக் கொள்ள இயலும்; அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

3. பாதுகாப்பற்றதோ என்ற பயம்..!

சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, சரியான உடல் ஆரோக்கியத்துடன், சரியான முறையில் சிகிச்சை செய்து கொண்டால், இரண்டுமே பாதுகாப்பானது தான். சிசேரியன், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துமோ என்ற பயம் வேண்டாம். சிசேரியனால், நீங்கள் எந்தவித நோய்களையும் அடைய மாட்டீர்.

4. மாற்று எண்ணம் வேண்டாம்..!

நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதில் உறுதியாக இருங்கள். நீங்கள் சிசேரியன் செய்து கொள்ளும் முடிவினை மேற்கொண்டால், உற்றார் மற்றும் உறவினர் பலவித கட்டுக்கதைகளைக் கூறி, உங்களை குழப்பினாலும் உங்கள் முடிவில் திடமாய் இருங்கள். உங்களை பற்றி உங்களுக்கே தெரியும்,நீங்கள் சரியான முடிவையே எடுப்பீர்! என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.

5. தாய்ப்பால் கொடுக்க முடியாது!

சிசேரியன் செய்து கொண்டால், தாய்ப்பால் கொடுக்க முடியாது என்ற கட்டுக்கதை உண்மையல்ல. உண்மை யாதெனில், சிசேரியன் செய்து கொள்ளும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பில் தாமதம் ஏற்படுமே தவிர, முற்றிலும் கொடுக்க முடியாத நிலை ஏற்படாது.

6. காயம் ஆற அதிக காலமாகும்..!

சிசேரியன் செய்து கொள்ளும் பெண்களுக்கு, காயம் ஆற வெகு காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் சரியான உணவு, மருந்துகள் மற்றும் சரியான ஓய்வு எடுத்துக் கொண்டால், எத்தகைய காயங்களும் விரைவில் ஆறும்.

7. சாப்பாட்டில் தடைகள்..!

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு, கட்டுப்பாடான உணவு முறை தேவை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், உண்மையில் ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான மருந்துகளை உட்கொண்டால், எந்தவித உணவு கட்டுப்பாடும் அவசியமில்லை. சரியான சரிவிகித உணவின் மூலம், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களை எடுத்துக்கொண்டால், உங்களுக்கு பிடித்த உணவுகளையும் அவ்வப்போது உண்ணலாம்; எவ்வித தடையுமில்லை…

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: