பிரசவ பெல்ட்: என்ன செய்யும் மற்றும் வைத்திருக்க வேண்டியதன் அவசியமென்ன?

பிரசவம் என்ற ஒரு அழகான, வலியான பயணத்திற்கு பின் வாழ்க்கையிலும், உடலிலும் பல மாற்றங்கள் நிகழும். அம்மாற்றங்களில் சில விரும்பத்தக்கதாகவும், சில வேண்டாதனவாகவும் இருக்கலாம். இவற்றில் முக்கியமான ஒன்று பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்; அதிலும் பெரிதாகிக் காணப்படும் அவர்களின் வயிறு. 

இம்மாற்றத்தால், பெண்கள் வயது முதிர்ந்தவர் போலவும், தோற்றத்தின் அழகு குறைந்தும் காணப்படுவர். இக்குறையை சரிசெய்ய பிரசவித்த பெண்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய பிரசவ பெல்ட் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் இப்பதிப்பில் படித்தறியலாம்…!!

1. உடலை கட்சிதமாக்க…!

பிரசவத்தால், உங்கள் வயிறு பெரிதாகி இருக்கலாம், இது உங்கள் தோற்றத்தின் அழகைக் குறைத்துக் காட்டும். இதனால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. உடலின் பெரிதான வயிற்று தசைகளை கட்டுக்குள் கொண்டு வந்து, உடலை கட்சிதமாக்க இந்த பெல்ட் உதவுகிறது.

2. உங்களை அழகாக்க…!

பிரசவத்தின் விளைவால், வயிறு பெரிதாகி, வயதானவர் போல், உங்களை தோற்றம் கொள்ளச் செய்யும். நீங்கள் இந்த பெல்ட் உபயோகிப்பதன் மூலம், உங்கள் உடல் தோற்றத்தை சீராக்கி, உங்களை அழகாக்குகிறது.

3. முதுவலிக்கு பை பை..

பிரசவத்தால், அச்சமயம் நிகழ்ந்த அறுவை சிகிச்சையால், உங்களுக்கு முதுகில் வலி ஏற்படலாம். இப்பெல்ட்டை அணிவதன் மூலம், பெண்களால், முதுகு வலியிலிருந்து விடுபட்டு, நிவாரணம் பெற முடியும்..

4. தழும்புகள் மறைய…

பிரசவத்தின் அறுவை சிகிச்சையால், பெண்களின் வயிற்றிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் பல தழும்புகள் ஏற்பட்டிருக்கும். இந்த பெல்ட்டினை அணிவதன் மூலம், உடலில் உள்ள தழும்புகளை மறையச் செய்யலாம்.

மேற்கூறிய பயன்களைத் தவிர, இது பல வண்ணங்களிலும், துவைப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.

இதை வாங்கி பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்; இதை அணிவதால், ஒவ்வாமை ஏற்படுமா என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும்…!!

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: