கருவிலிருந்து குழந்தை வெளிவரும் மாதிரி காணொளி(video)

கருவில் சிறிய குழந்தையை சுமக்க துவங்கியவுடன், உங்கள் பொறுப்புகள் அதிகரிக்க துவங்கிவிடும். நீங்கள் இதுவரை ஒரு கவலையற்ற நபராகவும், விளையாட்டு தனமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதிலிருந்து நீங்கள் எதிலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் சரியான அளவில் உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எப்போதும் மன அமைதியுடன் சாந்தமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் கோபம் அதிக அளவில் ஏற்படாத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போதே, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் வளரவளர உங்களுக்கு, மன நிலை மாற்றம், முட்டாள் தனமாய் ஆசைப்படுத்தல், எப்பொழுதையும் விட ஆற்றல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். ஆனால் இவை அனைத்தும் சாதாரணமான ஒன்று தான். இந்த மாற்றங்களை நீங்கள் உணரும் போது, உங்கள் வயிற்றில் சிறிய குழந்தை வளர்ந்து வருவதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் எதை செய்தாலும், அதை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். இங்கு உங்கள் கர்ப்பகாலத்தை பாதிக்க கூடிய 4 விஷயங்களை பார்க்கலாம்.

1 மோசமான தூக்க நிலை

கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளை பற்றி பல கர்ப்பிணி பெண்கள் அவர்களின் வசதியான உறங்கும் நிலைகளை வரையறுக்கிறார்கள். ஒரு புறமாக ஒருக்களித்து படுத்து உங்கள் கால்களை மடித்து கொண்டு உறங்கினால், பார்ப்பதற்கு குழந்தை உறங்குவதை போலவே இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் வயிற்றின் கீழ், கால்களுக்கு இடையில் மற்றும் முதுகின் பின்புறத்தில் ஒரு தலையணை வைத்து கொண்டு உறங்கலாம். உங்கள் முதுபுறமாக படுத்து உறங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

2 மோசமான உணவு பழக்கம்

நீங்கள் கர்ப்பமாக இருப்பதால், இருவருக்கும் சேர்த்து உணவருந்த வேண்டும் என்பது அவசியமில்லை. நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டாலே போதும். அதிக நொறுக்கு தீனிகளை கர்ப்பகாலத்தில் தவிர்ப்பது சிறந்தது.

3 முறையற்ற ஆடைகள்

நீங்கள் கருத்தரித்த பின் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். உடலின் வடிவமும், அளவும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். அதற்கான நீங்கள் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிய கூடாது என்பது என்பதல்ல. உங்களுக்கு பிடித்த நாகரிக உடைகளை தளர்வாகவும், சௌகர்யமாகவும் மற்றும் மூச்சு விட சிரமம் இல்லாத படியும் அணியலாம்.

4 கெட்ட பழக்கங்கள்

இங்கு கெட்ட என்பது, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது எனும் அர்த்தத்தில். நீங்கள் அவ்வப்போது குளிர்பானங்கள், மது அல்லது புகைப்பிடிப்பதை விரும்பலாம். ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கையில், புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருட்களைச் சாப்பிடுவது, துரித உணவு மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் உங்களை சார்ந்து இருப்பதால், குழந்தைக்கு ஆபத்து விளைவிக்க கூடியவற்றை கட்டாயம் தவிர்த்திடுங்கள். 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: