குழந்தையின் வாயுத்தொல்லையை கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி??

வாயுத்தொல்லை என்பது பெரியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனை என்று எண்ணினால் அது தவறு. ஏனெனில் பிறந்த குழந்தை முதல் வாலிப வயதினரும் இந்த வாயுத்தொல்லையால், அவதியுறுகின்றனர். குழந்தைகளில், வாயுத்தொல்லை என்பது, அதிகமான காற்றினை உள்ளிழுப்பதால் நிகழும்; இல்லையேல், உண்ணும் போதும், அழும் போதும், பால் பருகும் போதும் கூட நிகழலாம். குழந்தைகளின் இந்த வாயுத்தொல்லை ஏற்படுத்தும் பிரச்சனைகளை இப்பொழுது பார்க்கலாம்.  

குழந்தைகள், வாயுத்தொல்லையால்,

1. அழுதுகொண்டே மற்றும் தொணதொணத்துக் கொண்டே இருப்பர்.

2. அவர்களின் வயிறு கல் போன்று, கடினமாக இருக்கும்.

3. வழக்கத்திற்கு மாறாக, சற்று வித்தியாசமாக அழுதல், விக்கல், உமிழ்தல் போன்ற அறிகுறிகள் அவர்களில் தென்படும்.

தடுப்பது எவ்வாறு??

1. குழந்தைகள் பால் குடித்த பின் அவர்களை நேராக இருக்குமாறு சாய்த்துக் கொள்ளவும்; பிறகு அவர்களின் முதுகினை தடவிக் கொடுக்கவும். இது வாயுத்தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.

2. குழந்தைகளின் பால் பருகும் நிலையில் கவனம் செலுத்தவும்; சரியான பால் புகட்டும் நிலையை மருத்துவரிடம் கேட்டறிந்து கொள்ளவும்.

3. குழந்தைகளுக்கு அளிக்கும் உணவுகள் உகந்ததா எனவும், வாயுத்தொல்லை பிரச்சனைக்கு காரணமாகுமா எனவும் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அளிப்பது நல்லது.

4. குழந்தைக்கு அவசரமாக பால் புகட்டுவதை தவிர்க்கவும்.

இவற்றையெல்லாம் கவனியாது நடந்து, குழந்தை வாயுத்தொல்லையால், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? என அறியலாம் வாருங்கள்..!!

1. குழந்தைகளின் வயிறு மற்றும் முதுகுப் பகுதியில், மெதுவாக, வாயுத்தொல்லையை நீக்கும் வகையில் மசாஜ் செய்யவும்.

2. குழந்தைகளின் கால்களை சைக்கிள் ஓட்டுவது போல், அசைக்கவும்.

மருத்துவரின் ஆலோசனையுடன்,

3. வாயுத்தொல்லை நீக்கும் சிரப் வகைகளை குழந்தைக்குக் கொடுக்கலாம்.

4. வாயுத்தொல்லை நீக்கும் மருந்துகளையும் அளிக்கலாம்.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: