சிசேரியன் பிரசவத்தை எப்படி தடுக்கலாம்

பிரசவ காலத்தில் சிக்கல் ஏற்படும் போது மட்டுமே சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இப்போது இந்தியாவில் பெரும்பாலும் சிசேரியன் செய்யப்படுகிறது. இது சுகப்பிரசவத்தை விட, கொஞ்சம் கவலைப்பட கூடியதாக இருக்கும். சரியாக நீண்ட காலம் எடுத்தல், முதுகு வலி மற்றும் சிசேரியனுக்கு பின் ஏற்படும் சில அசௌகர்யங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆனால் கர்ப்பிணிகள் இதை நினைத்து கவலையடைய தேவையில்லை. நீங்கள் சில செயல்களை செய்வதன் மூலம் சிசேரியன் பிரசவத்தை தவிர்க்கலாம். 

1 மருத்துவரை தேர்ந்தெடுத்தல்

உங்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் மகப்பேறு மருத்துவரின் முதன்மை அறுவை சிகிச்சை விகிதத்தை பாருங்கள்! இது அவர் செய்த சிசேரியனில் எண்ணிக்கையைப் பற்றி உங்களுக்குச் சொல்லும். இந்த எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். அவர் செய்த சிசேரியன் 15 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தால், நீங்கள் அந்த மருத்துவரிடம் பரிசோதிப்பது சிறந்தது. 

நீங்கள் சுகப்பிரசவத்தை எதிர்பார்ப்பதாக உங்கள் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கு சிசேரியன் தவிர்க்கும் சில குறிப்புகளை கூறுவார்.

2 பேறுகால உதவியாளர்

பேறுகால உதவியாளராக இருக்கும் பெண்களின் கர்ப்பகாலம் முதல் குழந்தை பிறப்பு வரை கர்ப்பிணிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரசவத்தை பற்றிய தகவல்கள், உணர்ச்சிகள் மற்றும் உடல் ரீதியான ஆதரவு கொடுப்பது பேறுகால உதவியாளர் பணியின் ஒரு பகுதியாகும்.

இந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து தொடங்கி இப்போது முன்னெப்போதையும் விட முக்கியமானதாக இருக்கிறது. நாம் எப்போதும் இது தொடர்பான அறிவுரை தேவை என்றால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்போம். ஆனால் அது நவீன மருத்துவத்தை பற்றிய ஒரு இடைவெளியை ஏற்படுத்தும். பேறுகால உதவியாளரின் மூலம் இந்த இடைவெளி நிவர்த்தி செய்யப்படும்.

இவர்கள் உங்களுக்கு பிரசவ காலத்தை பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் தருவார்கள். சில எளிய வழிமுறை மற்றும் உடற்பயிற்சிகளையும் உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள்.

3 சரியான உணவு

கர்ப்பம் மற்றும் பிரசவ காலத்தில் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது. நல்ல சமசீரான உணவை உட்கொள்ளும் போது, அது உங்கள் உடல் வடிவத்தை தக்க வைத்து கொள்வதோடு, எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது. இது சிசேரியனுக்கான வாய்ப்பை குறைகிறது. சில சமயத்தில் உடல் எடை கூட சிசேரியனுக்கு வழிவகுக்கிறது. உங்களுக்கு கர்ப்பகால நீரழிவு நோய் இருந்தால், நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

4 உடற்பயிற்சி

நடைபயிற்சி, யோகா மற்றும் நீச்சல் போன்ற மிதமான மற்றும் குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சிகளை கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள பரிந்துரைக்க படுகிறது. உங்களையும் குழந்தைகளையும் கச்சிதமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க இது உதவுகிறது. மேலும் இது சிசேரியனுக்கான வாய்ப்பை குறைக்கிறது. உங்கள் உடல் கொஞ்சம் வியர்த்து, இதய துடிப்பு அதிகரிக்கும் வரை செய்ய வேண்டும். இது குறித்து மருத்துவ ஆலோசனை செய்வது சிறந்தது.

5 பிரசவ வலியை தூண்டுதல்

சில நேரங்களில் பிரசவ வலி தூண்டப்படுத்தல் அவசியமாகிறது. ஆனால் இது தேவையற்ற சமயங்களில் தவிர்ப்பது சிறந்தது. உங்கள் வலியை சரி கட்ட “தேர்ந்தெடுக்கப்பட்ட தூண்டல்” முறை கையாளப் படுகிறது. உங்கள் சுவாசம் மற்றும் பிரசவ வலிக்கான நுட்பங்களுடன் உங்களுக்கு உதவ உங்கள் கணவர் அல்லது உங்கள் விருப்பத்திற்குரிய ஒருவரின் ஆதரவை பெறுங்கள். வலி மேலாண்மை பற்றிய உங்கள் விருப்பங்களை மருத்துவருடன் கலந்துரையாடுங்கள். 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: