சுகப்பிரசவத்திற்கான குறிப்புகள்..!

கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் பிரசவம் சுகப்பிரசவமாக நிகழ வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசை. ஆனால், சந்தர்ப்பம் அல்லது உடல் மற்றும் மன ஆரோக்கியம் காரணமாக சிலர் சிசேரியன் செய்து கொள்கின்றனர். பெண்கள் சிசேரியன் செய்து கொள்வதற்கான காரணங்களை இப்பொழுது காணலாம்..!  

1. பிரசவ வலியினை தங்க இயலாது என்னும் எண்ணம் கொண்ட, மனவலிமை குன்றிய பெண்கள்.

2. பிரசவ வலி வரும் காரை காத்திருக்க தயாராக இல்லாத பெண்கள்.

3. பிரசவத்தை பற்றிய பயம் உள்ள பெண்கள்.

4. சிசேரியன் செய்து கொண்டால் வலி குறைவாக இருக்கும் என்று நம்பும் பெண்கள்.

5. பிறப்புறுப்பைக் காக்க நினைக்கும் பெண்கள்..!

இவ்வாறெல்லாம் எண்ணி, இயற்கையாக நடக்கும் சுகப்பிரசவத்தினை இக்கால பெண்கள் தவிர்க்கின்றனர்; இவ்வாறு தவிர்ப்பதை விட மிகப்பெரிய முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை. இயற்கையாக எந்த நிகழ்வு நிகழ்ந்தாலும், அது ஏற்படுத்திய காயங்களும், வலிகளும் விரைவில் குணமாகக் கூடியவை.. இதை பெண்கள் மறக்கலாகாது. இந்த பதிப்பில் சுகப்பிரசவத்திற்கான சில குறிப்புகளைப் பற்றி காணலாம் வாருங்கள், கர்ப்பிணிகளே..!

1. குழந்தை பிறப்புக்கு முன்னான கல்வி..!

கர்ப்பம் தரித்த கணம் முதல் அல்லது அதற்கு முன்னரே, பிரசவம் என்பதை பற்றி முழுமையாக படித்தறியவும்; பிரசவம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்..! சிறந்த மருத்துவ ரீதியான புத்தகங்களை படித்து பிரசவம் குறித்து முழுதும் அறியவும். சில மருத்துவமனைகளில், இலவச பிரசவம் குறித்த கலந்தாய்வுகள் நடத்தப்படும்; அவற்றில் கலந்து கொண்டு, மருத்துவர்களின் அறிவுரையை பெறவும்.

2. சரிவிகித உணவு..

நீங்கள் படித்து அறிந்ததன் மூலம், உணவு முறைகள் பற்றிய யோசனை உங்களுக்கே கிடைத்திருக்கும். அதன்படி, தினமும் சத்தான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கடலை போன்ற பருப்பு வகைகள், கீரைகள் என உங்கள் மற்றும் குழந்தையின் உடல் நலத்தை மேம்படுத்தும் உணவுகளை மேற்கொண்டாலே, எளிதில் சுகப்பிரசவம் நிகழும். மேலும் உணவு முறைகள் குறித்து, மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பின் மேற்கொள்ளவும்.

3. தினசரி உடற்பயிற்சி..!

கர்ப்ப காலத்தில், அதிகம் பசி எடுப்பது போல், உணர்வு ஏற்படும்; மேலும் குழந்தையாகவும் நீங்கள் உணவு உட்கொள்ள வேண்டி இருக்கும். இச்சமயங்களில் உங்கள் உடல் எடையை சிறக்க வைத்திருக்க தினசரி உடற்பயிற்சிகள் அவசியம்; உடல் எடை சரியானதாக இருந்தால், சுகப்பிரசவம் இலகுவாக நடந்தேறும்.

4. மனஅழுத்தம்..!

தாயாக போகும் பெண்ணின் மனநிலையை பொறுத்தே குழந்தையின் மனநிலை அமையும். எனவே, கர்ப்பிணிகள் மனஅழுத்தத்தைக் குறைத்து, மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்..!

5. மூச்சுப்பயிற்சி..!

குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆகையால் யோகா முறைகளில் சொல்லப்படும் சில மூச்சுப்பயிற்சிகளை மேற்கொண்டு, மூச்சுத்திணறலில் இருந்து விடுபடுவது நல்லது. கர்ப்பகாலத்தில் ஏற்படும், இந்த மூச்சு தொடர்பான பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்து, முடிவு எடுப்பது சிறந்தது.

6. நல்ல மருத்துவமனை! நல்ல மருத்துவர்..!

சில மருத்துவர்கள், சில மருத்துவமனைகள் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்தாலும் அதைத் தடுத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கோடு சிசேரியன் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆகையால், நீங்கள் அணுகும் மருத்துவரும், மருத்துவமனையும் சுகப்பிரசவத்தை அனுமதிக்கிறதா? பிரசவம் செய்து கொள்ள சிறந்த இடமா என்பதை சோதித்து அறியவும்.

7. கர்ப்பகால மசாஜ்..!

கர்ப்பகாலத்தில், பெண்களுக்கு ஆங்காங்கு உடலில் வீக்கங்கள், பிரசவ ஹார்மோன் சுரப்பால் ஏற்படலாம். அப்படி ஏற்படுகையில், சரியான மசாஜ் முறைகளைக் கையாண்டு வீக்கத்தையும், வலியையும் விரட்டலாம். மசாஜினை தினசரி செய்வதன் மூலம் சுகப்பிரசவத்தை நிச்சயம் செய்து கொள்ளலாம்…

8. நல்ல உறக்கம்..

கர்ப்பிணிகள், கர்ப்பகாலத்தில், கூறப்படும் சரியான உறக்க முறைகளை பின்பற்ற வேண்டும். மருத்துவ ஆலோசனையுடன் உறக்க முறைகளை நிச்சயித்து, நன்கு உறங்கி எழ வேண்டும்.

9. பயம்..!

மனதிற்கு பயம் தரும், கதைகளை படிப்பது, கேட்பது, அப்படிப்பட்ட படங்களை பார்ப்பது என இவற்றை, கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கக் கூடியதாய் அமைகிறது. ஆகையால், இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது…

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: