மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை..!

மாதவிடாய் என்பது ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒரு முறையும் பெண்களுக்கு ஏற்பட கூடிய நிகழ்வு. வயிற்று வலி, ஹார்மோன் ஏற்ற தாழ்வால் ஏற்படும் எரிச்சல், முதுகு வலி மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படுவதால், இந்த காலத்தில் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மாதவிடாய் காலத்தில் சில செயல்களை செய்யலாமா, கூடாத என பெண்களுக்கு குழப்பம் இருக்கும். சிலர் செய்யலாம் என்றும், சிலர் செய்ய கூடாது எனவும் கூறும்போது அவர்களுக்குள் குழப்பங்கள் அதிகரிக்கும். இங்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை பற்றி பார்க்கலாம்.

1 மாத்திரை

தற்போதைய காலத்தில் பெண்கள் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து மாத்திரைகளை எடுப்பது ஹார்மோன்களை மோசமாக்கி, உடலில் பல சிக்கல்களை தோற்றுவிக்கும். எனவே, வயிற்று வலிக்கு மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்த்து, இயற்கை வழிகளை முயற்சித்து மாற்றங்களை காணலாம்.

2 உடற்பயிற்சி

பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால் அது தவறு. மாதவிடாய் காலத்திலும் மிதமான உடற்பயிற்சியை செய்து வந்தால், வயிற்று வலி மற்றும் இதர உடல் வலிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொடர்ந்து செய்து வரும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்தில் தவிர்த்தால் மிகுந்த உடல் சோர்வு மற்றும் வயிற்று வலியும் அதிகமாகும் அபாயம் உள்ளது.

3 உணவைத் தவிர்த்தல்

மாதவிடாய் காலத்தில் கட்டாயம் உணவை தவிர்க்க கூடாது. உணவை தவிர்த்தால், வயிற்றில் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, அதனால் வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி மற்றும் பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும். பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

4 பால் பொருட்கள்

கால்சியம் அடிவயிற்று பிடிப்பை சரி செய்ய உதவக்கூடியது. ஆனால், அனைத்து பால் பொருளில் இருக்கும் கால்சியமும் பயன் தராது. மாறாக, பால் பொருட்களில் உள்ள அரச்சாடோனிக் அமிலம் வயிற்றுப் பிடிப்பை உண்டாக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் பால் பொருட்களை தவிர்ப்பது சிறந்தது.

5 பாதுகாப்பில்லா உடலுறவு

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பில்லை எனவும் , மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது எனவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மை என்னவென்றால், மாதவிடாய் காலத்தில் சுத்தமில்லாமல் இருப்பதால் பாதுகாப்பில்லாத உடலுறவில் ஈடுபடக்கூடாது. எனவே முடிந்த வரை இக்காலத்தில் உறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

6 வேக்சிங் மற்றும் த்ரெட்டிங்

மாதவிடாய் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருப்பதால், இக்காலத்தில் வேக்சிங், த்ரெட்டிங் செய்தால் கடுமையான வலியை உணரக்கூடும். மாதவிடாய் காலத்தில் செய்யாமல் இருப்பது சிறந்தது.

7 அதிகமாக சாப்பிடுதல்

அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. மாதவிடாய் காலத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சில பெண்கள் ஒரே இடத்தில் அமர்ந்து எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பது, சோர்வு போன்றவையே ஏற்படும்.

8 உப்புமிக்க உணவுகள்

உப்புமிக்க உணவுகள் உண்பதை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தி அசௌகரியத்தை உண்டாக்கும். உடல் எடையையும் அதிகரிக்க செய்யும். உப்பு அதிகம் மிக்க உணவுகளை மற்ற நாட்களிலும் தொடர்ந்து தவிர்த்தால், இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: