அம்மாக்களே சிறந்தவர்கள் என்பதை உணர்த்தும் 9 விஷயங்கள்..!

 

10 மாதங்கள் நம்மை கருவறையில் திருவுருவாய் சுமந்து, உங்களுக்கான பணிவிடைகளை நீர் உருவாகும் முன்னரே செய்து, உருவாகி வெளிவந்தபின்னும் பணிவிடைகள் செய்து, நீங்கள் மற்றோரு உயிரை தோற்றுவிக்கும் நிலையில் இருக்கையிலும் உங்களுக்காக உங்கள் அன்னை செய்யும் சேவை முடிவதில்லை; நீங்கள் தோற்றுவித்த உயிர் மற்றும் உங்களை, என வயதான காலத்திலும் உங்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க தாயால் மட்டுமே முடியும்..! அப்படி தாயின் மகத்துவத்தை உணர்த்தும் சில விஷயங்களை பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்..! 

1. சுயநலமில்லாத பாசம்..!

கருவில் உருவான நொடி முதல் கல்லறையை அடையும் வரை உங்கள் மீது கொண்ட அன்பு, மாறாது, சுநலமில்லாத பாசத்தை வெளிப்படுத்த உங்கள் தாயால் மட்டுமே இயலும்..!

2. உற்ற நண்பன்..!

உங்கள் வாழ்வில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய சிறந்த நண்பர் உங்கள் அன்னை மட்டுமே! உங்கள் பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவும், இரகசியங்களை பாதுகாக்கும் காவலனாகவும் தாய் இருப்பாள்..!

3. ஊக்க சக்தி..!

தாய் தான் செய்யும் செயல்களில் சோர்வு என்பதையே அடைய மாட்டார். அவரினுள் பொதிந்திருக்கும் ஊக்க சக்தியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

4. எல்லையற்ற அன்பு..!

களங்கமில்லாத பாசத்தை தாயால் மட்டுமே தர இயலும். நிபந்தனையற்ற எல்லையற்ற பாசத்தை தர தாய் ஒருவரால் மட்டுமே முடியும்..!

5. பக்கபலம்..!

நீங்கள் எச்செயல் செய்தலும் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, உங்களை ஊக்குவிக்கும் ஒரே சக்தி உங்கள் தாயே!

6. சிறந்த ஆசான்..!

உங்களுக்கு முதன் முதலாக எழுத படிக்க கற்றுத் தந்து, உங்களை வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்ய வழிகாட்டியாக, ஏணியாக இருந்து ஏற்றி விட்ட சிறந்த ஆசான் உங்கள் அன்னையே..!

7. சரியான வழி..!

உங்களுக்கு வாழ்வில் சரியான பாதையை மட்டுமே காட்டி, நீங்கள் உங்கள் இலக்கை அடைய ஊக்குவித்து , சரியான வழி காட்டும் அந்த கலங்கரை விளக்கம் தாயே..!

8. புன்னகை..!

நீங்கள் எப்பொழுதும், நீங்காத மங்காத புன்னகையுடன் இருக்க வேண்டும் என்று ஓயாது பிரார்த்திக்கும் மனது, உங்கள் அன்னையுடையதே..!

9. வடிகால்..!

உங்களுக்கு நேரும் அனைத்து பிரச்சனைகளும் அன்னையின் ஒரு அரவணைப்பு கலந்த கட்டியணைத்தலில் மாயமாய் மறைந்துவிடும். அன்னையின் கட்டியணைத்தலை விட சிறந்த வடிகால் வேறில்லை..!

உண்மையில் சொல்லப்போனால், அன்னையின் அருமைகளை விவரிக்க வார்த்தையே இல்லை; மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் அவள்..!

Leave a Reply

%d bloggers like this: