உடல் எடையை குறைக்க விரும்புபவர் தெரிந்திருக்க வேண்டிய 3 விஷயங்கள்..

அதிக உடல் எடையால் கஷ்டப்படுபவரா நீங்கள்..? உங்கள் உடல் எடையை குறைக்க படாதபாடு படுகிறீரா? நீங்கள் எடையை குறைக்க இவ்வளவு கஷ்டப்படக் காரணம் என்ன தெரியுமா ஒரு 3 விஷயங்களை அறியாதது தான். அப்படியென்ன 3 விஷயங்கள்?? அவற்றை அறிய ஆவலா.. வாருங்கள் பதிப்பிற்குள் சென்று அறியலாம்..  

1. உணவு..!

உடல் எடையை குறைக்க உதவும் முதல் அஸ்த்திரம் உணவு..! எந்த உணவினை உண்ண வேண்டும், எதை உண்ண கூடாது என்ற தெளிவு இருக்க வேண்டும். குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவுகளையே உண்ண வேண்டும்; அப்படி உண்டால் தான், உடல் எடையை குறைக்கும் மார்க்கத்தில் ஒரு அடியாவது எடுத்து வைக்க முடியும்..

2. உறக்க முறை..!

உறக்கம் உடல் எடையை குறைக்க என்ன செய்யும் என்ற கேள்வி உங்களுள் எழுகிறதா? நீங்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். அதற்கு அதிகப்படியான நேரம் உறங்கினால், அந்த அதிகப்படியான உறக்கம் உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

3. உடற்பயிற்சி..

உடல் எடையை குறைக்க தினம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் மட்டும் போதாது. முதலில் நடைப்பயிற்சியில் தொடங்கி, படிப்படியாக பல உடற்பயிற்சிகளை செய்யும் அளவிற்கு உடலினை வலுப்படுத்த வேண்டும்..

இம்மூன்று செயல்களை சரியாக செய்தால், உடல் எடையை எளிதில் எவ்வித சிரமமும் இல்லாமல் குறைத்து விடலாம்..

Leave a Reply

%d bloggers like this: