குழந்தைகளின் திடஉணவு மாற்றம் பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்…

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாத காலம் வரை தாய்ப்பாலின் சுவையை மட்டுமே கண்டிருப்பர்; பின் நீங்கள் திட உணவு அளிக்கத் தொடங்கியதும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் சுவை அவர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் இருந்து திட உணவுகளுக்கான மாற்றம் புதிதாக இருந்திருக்கும். 

இவ்வுணவுகளை எப்படி உண்ண வேண்டும், எப்படி விழுங்க வேண்டும் என்றெல்லாம் மெதுவாக கற்றுக் கொள்ளத் தொடங்குவர். இப்படி புதிதாக திட உணவுகளை பழக்கப்படுத்தும் போது, குழந்தைகள் என்ன மாதிரியான மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதனை தாய்மார்கள் அறிய வேண்டும்; அதே போல் இவ்வுணவுகளை அறிமுகப்படுத்தும் போது, குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏதேனும் ஏற்படுகிறதா என்று கவனித்து அளிக்க வேண்டும்.

திட உணவுகள் அளிக்கையில், குழந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்..

1. குழந்தைகளுக்கு முதலில் திட உணவு கொடுக்கத்தொடங்கையில், அதிகம் விழுங்காது துப்புவார்கள்; இதற்கு காரணம் அவர்களுக்கு எப்படி விழுங்குவது என்று தெரியாமல் இருக்கலாம் அல்லது உணவின் சுவை பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் சரியாக உண்ணாமல் இருந்தால், குழந்தைகள் பலம் பெற மாட்டர்; மேலும் நோய் எதிர்ப்பு திறனும் மேலோங்காது. ஆகையால், குழந்தைகளை நேரநேரத்திற்கு சரியாக உண்ண வைப்பது அன்னையின் கடமையாகும்..

2. குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கியதும், அறிமுகப்படுத்தக் கூடாத உணவுகள் சில உள்ளன அவை., கடலைகள், விதைகள், உலர்ந்த திரைட்சை, கடின மிட்டாய், திராட்சைகள், கடின காய்கறிகள், பாப்கார்ன், அதிக வெண்ணெய், சூடான கரித்துண்டுகள்.. இவற்றை குழந்தைகள் சரியான வயதை எட்டும் போதே அளிக்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து பெற சத்துக்களை வேறு ஏதேனும் உணவின் மூலம் குழந்தை பெறுகிறதா என்பதை நிச்சயித்துக் கொள்ளவும்.

3. குழந்தைகளின் உணவிலோ அல்லது பாலிலோ தேனினை சேர்ப்பதை நிறுத்தவும். ஏனெனில் குழந்தைகளின் வயிறு தேனினை செரிக்கும் அளவிற்கு மாற்றம் அடைந்திருக்காது.

Leave a Reply

%d bloggers like this: