குழந்தைகளை குதூகலமாக்கும் பாதுஷா!!!

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் திண்பண்டங்கள் கொடுப்பது பெற்றோரின் வழக்கம். குழந்தைகளும் இவற்றை விரும்பி உண்வார்கள். பெரும்பாலும் அவற்றை கடைகளில் வாங்கி கொடுப்பார்கள். அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்க கூடியது. அவர்கள் சுத்தமாக இருக்கும் இடத்தில் சுகாதாரமான முறையில் செய்கிறார்களா என நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே பிரியம் தான். ஆனால் அவை ஈக்கள் மொய்த்து, பூச்சிகள் விழுந்து பின் உங்களிடம் வந்து சேர்க்கிறது, இவற்றை நாம் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இவற்றை தவிர்க்க முடிந்த வரை வீட்டில் தயாரித்தவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பது சிறந்தது. இங்கு குழந்தைகளுக்கு பிரியமான பாதுஷா எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

1 மைதா மாவு – 1 ½ கப்

2 சர்க்கரை – ¾ கப்

3 சமையல் சோடா – சிறிதளவு

4 பால் – ½ கப்

5 வெண்ணை – 3 தேக்கரண்டி

6 எலுமிச்சை – ½ தேக்கரண்டி

7 எண்ணெய் – தேவையான அளவு

8 தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

1 பாத்திரத்தில் மைதா மாவு, சமையல் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

2 பின் அதனுடன் வெண்ணை மற்றும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

3 அதனுடன் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். நன்கு அழுத்தி பிசைந்தால் பாதுஷா மிருதுவாக இருக்கும். இந்த கலவையை 15 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.

4 அகலமான வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மாவு எடுத்து கொண்ட பாத்திரத்தில் முக்கால் கப் அளவிற்கு சர்க்கரை எடுத்து (உங்கள் தேவைக்கேற்ப அதிகமாகவும் எடுத்து கொள்ளலாம்) பாத்திரத்தில் போடவும்.

5 அதனுடன் அரை குவளை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை நன்கு கரைந்த உடன், இறக்கி வையுங்கள். (எலுமிச்சை சாறு சேர்த்தால் சர்க்கரை பாகு கெட்டியாகாமல் இருக்கும்).

6 இப்போது மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பாதுஷா வடிவில் செய்து வைத்து கொள்ளவும்.

7 எண்ணையை சூடேற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுத்து சர்க்கரை கலவையில் சேர்க்கவும். அவ்வப்போது அவற்றை திருப்பிவிடுங்கள். இதை அரைமணி நேரம் ஊற விடுங்கள்.

8 அதன் மீது பாதம் அல்லது முந்திரி கொண்டு அலங்கரிக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் பாதுஷா தயார். 

Leave a Reply

%d bloggers like this: