குழந்தைகளை மகிழ்விக்கும் மைசூர் பாக் செய்வது எப்படி?

பெரும்பாலும் குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே பிடிக்கும். என்ன வகை இனிப்பு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் நெய் மணத்துடன் இருக்கும் மைசூர் பாக் என்றால், பெரியவர்களுக்கும் மிகவும் பிரியம் தான். பெரும்பாலும் மைசூர் பாக் நாம் கடையிலேயே வாங்கி கொடுப்போம். என்ன தான் கடைகளில் வாங்கி கொடுத்தாலும், நாம் வீட்டில் செய்து அதை குழந்தைகள் விரும்பி ரசித்து உண்ணும் போது, நாம் அடையும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. இங்கு குழந்தைகளை மகிழ்விக்க மைசூர் பாக் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

1 கடலைமாவு – 1 கப்

2 சர்க்கரை – 1 கப்

3 தண்ணீர் – ½ கப்

4 நெய் – 1 ½ கப்

செய்முறை

1 பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலை மாவை வாசம் வரும் வரை வறுக்கவும்.

2 மற்றொரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு வரும் வரை காய்ச்சவும்.

3 வறுத்து வைத்த கடலை மாவுடன் நெய் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

4 இந்த கலவையை சர்க்கரை பாகுடன் கலந்து, கட்டி இல்லாமல் கிளறவும். கெட்டிப்படும் போதெல்லாம் நெய் சேர்த்து கிளறவும்.

5 வேக வேக அதன் நிறம் மாறி நல்ல மணம் வருவதோடு, கலவை நன்கு திரண்டு வரும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து கலவையை நெய் தடவிய வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற வையுங்கள்.

6 ஆறியதும் உங்களுக்கு வேண்டிய வடிவில் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

7 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மைசூர் பாக் தயார்.

Leave a Reply

%d bloggers like this: