பெண்களின் அந்தரங்க குறைபாடுகளுக்கான தீர்வு

பெண்கள் பொதுவாக எதையும் மனதில் வைத்து கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் நண்பர்கள் மற்றும் தாயுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்களும் இருக்கும். அவர்களின் அந்தரங்க விஷயங்களை கணவரை தவிர யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. சில நேரங்களில் அவர்களிடமும் சொல்ல முடியாத சில விஷயங்களும் இருக்க தான் செய்கின்றன. கர்ப்பகாலம், பிரசவ காலம் மற்றும் வயது முதிர்வு காலங்களில் பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் சில பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள். பெண்களுக்கு அந்தரங்க குறைபாடுகள் இருந்தாலும், விருப்பமில்லாமல் இருக்கும். அதற்கான தீர்வுகளை இங்கு பார்க்கலாம்.

அந்தரங்க பிரச்சனைகள்

1 உடலுறவின் போது வலி

2 பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்

3 உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.

பெண் குறைபாடுகளுக்கு மனரீதியான காரணங்கள்

1 அறியாமை, உடலுறவு என்றாலே தவறான ஒன்று என்கிற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்

2 பரபரப்பு, மனச்சோர்வு

3 கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு

4 குழந்தை உருவாகி விடுமோ என்ற பயம்

5 வளரிளம் பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்களால் அல்லது தெரியாதவர்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருத்தல்

சிகிச்சை முறைகள்

பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கு, குறிப்பாக மனக்கோளாறுகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் போன்ற ஆயுர்வேத சிகிச்சைகள் இந்த பிரச்சினைகளுக்கு தரப்படுகின்றன. அதுமட்டுமின்றி உடல்கோளாறுகளை பாலியல் மருத்துவர்களிடம் ஆலோசித்து அதற்கான சிகிச்சையை பெறவேண்டும். மனதளவில் பிரச்சினை இருப்பின் மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை(counselling) பெறுவது நல்ல பலனையளிக்கும்.

அதேபோல் யோகாவும் பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். யோகா பாலியல் உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். பதற்றம், மன அழுத்தம் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

Leave a Reply

%d bloggers like this: