அந்தரங்க பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் 7 வழிகள்

பெண்கள் எப்போதும் அழகிற்கு முக்கியதுவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சில பெண்கள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார்கள். சில பெண்களுக்கு கருமை என்பது பிடிக்காத ஒன்றாக இருக்கும். அவர்கள் அதெற்கென பலவற்றை செய்து சருமத்தை வெண்மையாக்க முயற்சிப்பார்கள். பெரும்பாலும் உடலின் சில பகுதிகளில் கருமை நிறம் காணப்படும். குறிப்பாக அக்குள், பிறப்புறுப்பு பகுதி மற்றும் சில இடங்களில் அதிக கருமை காணப்படும். அப்பகுதிகளில் அதிக காற்றோட்டம் இல்லாமல் வியர்வை வெளியேறுவதால், இறந்த செல்கள் அவ்விடத்தில் எளிதில் நீக்க முடியாதவாறு தேங்கி, கருமையாகின்றன.

நம் உடலிலேயே அந்தரங்க பகுதி தான் மிகவும் உணர்ச்சி நிரம்பிய மென்மையான பகுதி. இங்கு இரசாயன கலப்பில் உருவான பல வகை களிம்புகளை உபயோகிப்பார்கள். இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். இங்கு இயற்கை முறையில் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிகளை பார்க்கலாம்.

1 கற்றாழை

ஒரு தேக்கரண்டி கற்றாழை சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 30 நிமிடங்கள் கழித்து, பஞ்சை நீரில் நனைத்து துடைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கருமை நீங்கும்.

2 அரிசி மாவு

அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, அந்த கலவையை கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.

3 எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் 10 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து, காட்டன் கொண்டு கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவி 3-5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம். அதை கழுவிய பின் தேங்காய் எண்ணெயைத் தடவினால், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கும்.

4 தேங்காய் எண்ணெய்

அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கிய பின், பால் பயன்படுத்தி அந்த இடத்தை துடைத்து எடுத்துவிட்டு, தேங்காய் எண்ணெயைத் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

5 தயிர்

தினமும் தயிரைப் பயன்படுத்தி அந்தரங்க பகுதியைச் சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

6 சந்தனம் மற்றும் ஆரஞ்சு

சந்தனப்பொடி மற்றும் ஆரஞ்சு தோல் பொடியை ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து கருமை நிறமுள்ள அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தடவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.

7 முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை மென்மையாக அடித்து, கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி, நன்கு காய்ந்த பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இது விரைவில் கருமையை மறைய செய்யும். 

Leave a Reply

%d bloggers like this: