அந்தரங்க பகுதியில் மறந்து செய்ய கூடாத 7 விஷயங்கள்

இன்றைய காலகட்டத்தில் எதிலிருந்து எப்படி நோய் தொற்றுகள் பரவுகிறது என்பதை கண்டறிவது அரிதான ஒன்று எனும் அளவிற்கு நோய்களும், நோய் தொற்றுகளும் ஏற்படுகின்றன. நம்மை சுத்தமாக வைத்து கொள்வதன் மூலம் நோய் தொற்றுகளையும், நோய் பரவுவதையும் தவிர்க்கலாம். அதிலும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதால், நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கும். இதற்காக பலர் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் என்று சில தவறுகளை செய்கின்றனர். அந்தரங்க பகுதியில் எந்த செயல்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று தெரியாமல் செய்வதால் பலர் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் சந்திக்கின்றனர். இங்கு அந்தரங்க பகுதியில் மறந்தும் செய்ய கூடாத 7 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

1 நறுமணமிக்க சோப்புக்கள்

அந்தரங்க பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது என்று நல்ல நறுமணமிக்க சோப்புக்களைக் கொண்டு அந்தரங்க பகுதியை அளவுக்கு அதிகமாக சுத்தம் செய்யாதீர்கள். இதனால் அந்த சோப்புக்களில் உள்ள இரசாயனங்கள் அந்தரங்க பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தொற்றுக்களையும் ஏற்படுத்தும்.

2 ஈரம்

நம்மில் பலர் குளித்து முடிந்த பின், அந்தரங்க பகுதியை துடைக்காமல், அப்படியே ஈரத்துடனேயே உள்ளாடையை அணிந்து கொள்வோம். சிலர் சிறுநீர் கழித்த பின் அப்படியே உள்ளாடை அணிவது அல்லது நீரினால் சுத்தம் செய்த பின் ஈரத்துடன் அணிவது போன்றவற்றை செய்வார்கள். இப்படி உலர்த்தாமல் உள்ளாடையை அணிந்தால், அப்பகுதியில் பாக்டீரியாக்கள் பெருக ஆரம்பிக்கும்.

3 இறுக்கமான ஆடை

பெரும்பாலானோர் உடலுக்கு பொருத்தமான மற்றும் கச்சிதமான ஆடையை அணிகிறேன் என்று, இறுக்கமான உடைகளை அணிவார்கள். அந்தரங்க பகுதியை இறுக்குமாறான ஆடையை அணிந்தால், அவ்விடத்தில் வியர்வை அதிகரித்து, ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் இதர தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆகவே எப்போதும் அந்தரங்க பகுதியில் சற்று காற்றோட்டம் இருக்குமாறான உடையை அணிய வேண்டும்.

4 வாசனை திரவியங்கள்

சிலர் உடல் துர்நாற்றத்தைப் போக்க கடைகளில் கிடைக்கும் வாசனை திரவியங்களை, அந்தரங்க பகுதிக்கு அருகிலும் அடித்துக் கொள்வார்கள். அந்தரங்க பகுதி மிகவும் மென்மையானது என்பதால், அப்பகுதிக்கு அருகில் இரசாயனங்கள் நிறைந்த வாசனை திரவியங்களை பயன்படுத்தினால், அதனால் அவ்விடத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும்.

5 கடுமையாக அரிப்பு

அந்தரங்க பகுதியில் பல காரணங்களால் அரிப்புக்கள் ஏற்படலாம். என்ன தான் அரிப்புக்கள் ஏற்பட்டாலும், அப்போது கடுமையாக சொறியாமல், மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் கடுமையாய் சொரிவதனால் காயங்கள் ஏற்படுவதோடு, நோய் தொற்றுகளும் விரைவில் பரவும்.

6 சுயஇன்பம்

இது உங்களுக்கு நகைச்சுவையான ஒன்றாக இருக்கலாம். இப்பழக்கம் நம்மக்களிடையே இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் உள்ள பெண்கள் இம்மாதிரியான செயல்களை செய்கின்றனர். சுயஇன்பம் காண்பதற்கு என்று விற்கப்படும் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்துவார்கள். முடிந்தவரை இம்மாதிரியானதைப் பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

7 சுய பரிசோதனை

எந்த ஒரு பிரச்சனைக்கும் தாங்களாகவே சுய பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக அந்தரங்க பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு சுயமாக சிகிச்சை எடுப்பதைத் தவிர்த்து மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: