இந்த 5 உணவை கொடுத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்

குழந்தையின் ஆறுமாதத்திற்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களின் கேள்வியாக இருக்கும். குழந்தைகளை வளர வளர நல்ல ஆரோக்கியமான உணவை கொடுக்க துவங்கி இருப்பார்கள். உணவானது உடலுக்கு நன்மை தருவதோடு, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. இங்கு குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகளை பார்க்கலாம்.

1 தானிய வகைகள்

தினமும் உணவில் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். இதில் வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

2 பால்

குழந்தைகளுக்கு காலை மாலை என இரண்டு வேளைகளிலும் பால் கொடுப்பது சிறந்தது. செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால், முடிந்தவரை இரவில் பாலை தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

3 முட்டை மற்றும் நட்ஸ்

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும். தினமும் ஒரு முட்டை மற்றும் தண்ணீரில் ஊற வைத்த பாதாமை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

4 மீன்கள்

மீன்களில் சாலமன் மீன் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவக் கூடியது. இதில் ஒமேக-3, ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது.

5 பெர்ரி பழங்கள்

மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதில் பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, அவுரிநெல்லி மற்றும் நாவல் பழம் சிறந்தவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான அளவு இருக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.

மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தையின் வயது குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று கொடுக்க வேண்டும். 

Leave a Reply

%d bloggers like this: