குழந்தைகளுக்கு பிரியமான குலோப் ஜாமுன் – ப்ரெட்டில் செய்வது எப்படி

குலோப் ஜாமுன் பிடிக்காதவர்கள் என்று யாருமே கிடையாது. அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதன் வடிவமும், வண்ணமும் பார்ப்பவரை ஈர்த்து, சாப்பிடத் தூண்டும். பெரும்பாலும் குலோப் ஜாமுன் குழந்தைகளை கவரும் திண்பண்டங்களில் ஒன்று. இதை கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்போம். சில சமயங்களில் கடைகளில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு செய்திருப்பீர்கள். அவற்றின் விலையும் சற்று கூடுதலாக தான் இருக்கும். இங்கு ப்ரெட்டை கொண்டு எளிதில் எப்படி குலோப் ஜாமுன் செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

1 ப்ரெட் – 5 முதல் 6 துண்டுகள்

2 பால் – 5 தேக்கரண்டி

3 சர்க்கரை – 100 கிராம்

4 தண்ணீர் – 100 மிலி

5 ஏலக்காய் – சிறிதளவு

6 குங்குமப்பூ – சிறிதளவு

7 எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1 பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பின் அதனுடன் ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை பாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி விடுங்கள்.

2 ப்ரெட் துண்டுடன் சிறிது சிறிதாக பால் கலந்து குலாப் ஜாமுன் மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

3 சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பில்லாமல் உருட்டி கொள்ளவும்.

4 பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணையை ஊற்றி சூடேற்றுங்கள்.

5 உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை எண்ணையில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

6 பின் இந்த உருண்டைகளை காய்ச்சி வைத்திருக்கும் சர்க்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கும் போதே போட்டு ஊறவிடவும்.

7 குழந்தைகளை மகிழ்விக்கும் சுவையான குலோப் ஜாமுன் தயார்.

இதை எளிதில் குழந்தைகள் விரும்பும் போதெல்லாம் வீட்டிலேயே செய்து கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியடைய செய்யுங்கள். இதன் விலையும், மற்ற தயாரிப்புகளை விட மிகக் குறைவு. 

Leave a Reply

%d bloggers like this: