மனைவி அன்பு கணவருக்காக விட்டுக் கொடுப்பவை

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு பெண் தன் தாய் வீட்டில் இருக்கும் போது அனைத்தும் கிடைக்கும், சகோதரர்கள் விட்டு கொடுத்து செல்வார்கள். அந்த வீட்டின் இளவரசியாக இருப்பாள். யாருக்காகவும் எதையும் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது. காலையில் தாமதமாக எழுவது, தோழிகளுடன் வெளியில் செல்வது என அவர்கள் விருப்பப்படி இருப்பார்கள்.

திருமணம் எனும் பந்தத்தில் இணைந்த உடன் அவர்களது வாழ்கை தலைகீழாக மாறிவிடுகிறது. அவர்களின் சகோதரர்கள் விட்டு கொடுத்ததை எல்லாம் தட்டி பறிப்பதற்கு அவளது கணவர் இருப்பார். கணவருக்காக என அவளது விருப்பத்தில் பாதியை விட்டு கொடுத்திருப்பாள். இங்கு மனைவிகள் தங்கள் அன்பு கணவருக்காக விட்டு கொடுப்பவற்றை பற்றி பார்க்கலாம்.

1 பொறுமை

பெண்கள் திருமணத்திற்கு முன் கோபக்காரர்களாகவும், எடுத்தெறிந்து பேசுபவர்களாகவும் இருந்திருக்கலாம். முன் கோபத்தால் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் பெற்றோரிடமும் கூட கடுமையாக நடந்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால், திருமணத்தின் பின் கணவரை பற்றிய புரிதலில் மாறி இருப்பார்கள். ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் மட்டுமே சண்டை, சச்சரவுகளை தவிர்த்து குடும்ப மகிழ்ச்சியை தக்க வைக்க முடியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்க வேண்டிய சிறந்த குணம் பொறுமை.

2 விருப்பம்

சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். இதன் அர்த்தம் அவரது குடும்பத்தினரை வெறுப்பார்கள் என்றல்ல. கணவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள். அவரின் அன்பிற்காக மட்டுமே ஏங்குவார்கள்.

3 மறைக்காதிருத்தல்

கணவரை மனதளவில் கூட ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்காது. உறவு சார்ந்து மட்டுமில்லாது. கணவனுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டார்கள். தான் செய்யும் எந்த ஓர் செயலும் கணவனை பாதித்துவிடக் கூடாது என சிறிய விஷயங்களில் கூட மிக கவனமாக இருப்பார்கள். அனைத்தையும் கணவரின் அனுமதி பெற்றே செய்வார்கள் அல்லது தெரியப்படுத்திவிட்டே செய்வார்கள்.

4 மன்னித்தல்

கணவன் தவறு செய்தால் வார்த்தைகளால் யுத்தம் செய்யாமல், மன்னிக்கவும், அந்த தவறினால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி மாற்றவும் முயற்சிப்பார்கள். மேலும் அலுவலகத்தில் இருந்து கோபமாக வீட்டிற்கு வரும் கணவரை நச்சரிக்காமல் அவர்களிடம் பக்குவமாக பேசி அவர்களை அமைதி படுத்துவார்கள். அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து யோசிக்க செய்வார்கள்.

5 தன்னலமில்லாமை

தன்னலமற்று, குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் குணம் உடையவள் மனைவி. எந்த ஒரு செயல்பாட்டிலும், குடும்பம், கணவன், குழந்தைகளுக்கு என்ன நல்லது என பார்த்து, பார்த்து செய்யும் இயல்புடையவர்கள். குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும் அவர்கள், அவர்களின் உடல் நலன், அழகு போன்றவற்றை கவனிக்க மாட்டார்கள்.

6 ஆதரவாளர்கள்

அறிவு ரீதியாக, உணர்ச்சி ரீதியாக சமநிலையில் செயல்படக்கூடியவர்கள் பெண்கள். இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே பார்வையில் கண்டு, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் குணம் உடையவர்கள். மனதளவில் கணவனுக்கு பெரியளவில் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் முடிந்ததை செய்ய முன்வருவார்கள்.

7 சுதந்திரம்

தன் கணவனின் நிலையை கண்டறிந்து, எது வேண்டியது, எது வேண்டாதது என புரிந்து செயல்படக் கூடியவர்கள். தங்கள் வாழ்க்கையின் சுதந்திரத்தை கெடாமல் பார்த்துக் கொள்வார்கள். தன் சுதந்திரம் என்ன என்று அறிந்த பெண்களால் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும். 

Leave a Reply

%d bloggers like this: