மாதவிடாய் காலத்தில் பெண்கள் அழகாக தெரிவதற்கான 5 காரணங்கள்..!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அவர்களுக்கும் ஏற்படும் வயிற்று வலி, முதுகுவலி மற்றும் உடல் வலியே இதற்கு முக்கிய காரணமாகிறது. இது பெண்களை மாதவிடாய் நாட்களை வெறுக்க செய்கிறது. என்னதான் வெறுத்தாலும் அதற்கு ஏதும் செய்ய முடியாது என்பது பருவமடைந்த அனைத்து பெண்களும் அறிந்ததே.

கருமுட்டை வெளிப்படுதல் என்பது ஒரு பெண்ணின் உடல் கருமுட்டையை உருவாக்கி, விந்து அணுவோடு கருத்தரிக்க அதனை வெளிப்படுத்தி, இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையாகும். மாதவிடாய் ஏற்படும் முதல் நாளிலிருந்து அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை, சராசரி சுழற்சி 28 நாட்களுக்கு நீடிக்கும். இது பெண்களை வெறுக்க செய்தாலும், அந்த நாட்களில் பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் எனும் கருத்தை கேட்டிருப்போம். இங்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் அழகாக தெரிவதற்கான 5 காரணங்களை பார்க்கலாம்.

1 கருமுட்டை வெளிப்படுதலின் போது, இனப்பெருக்கம் செய்யவும், திடமான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க, பெண்ணின் உடல் தாயாராக இருக்கும். இது ஆண்களை கவர்ந்திழுக்க செய்யும். கருமுட்டை வெளிப்படுதலின் போது, ஒரு பெண் தன்னையும் அறியாமால், ஒரு ஆணை ஈர்க்க முற்படுவாள். ஏனென்றால் இப்போது தான் அவளுடைய கருவுறும் தன்மை உச்சத்தில் இருக்கும். அவளின் பார்வையிலேயே இந்த தன்மையின் உச்சத்தை காண முடியும். என்ன தான் கட்டுப்பாட்டுடன் இருப்பவர் என்றாலும் கூட ஆர்வத்தைத் துாண்டுகிற உணர்வும், குணமும் சற்று அதிகமாக இருக்கும்.

2 கருமுட்டை வெளிப்படுதலின் போது, ஈஸ்ட்ரோஜென் அளவுகள் அதிகரித்து, அதனால் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் கன்னங்களும் உதடுகளும் சிவக்கும். இதனால் கூட கருமுட்டை வெளிப்படுதலின் போது, பெண்கள் கூடுதல் அழகுடன் காணப்படுவார்கள்.

3 கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கு மற்றொரு காரணமாக இருப்பது, இந்நேரத்தில் அவர்கள் உடல் மேற்கொள்ளும் மாற்றம். இந்நேரத்தில் அரை இன்ச் அளவிற்காவது இடை சுருங்கி, புற உருவம் நெளிவுசுழிவுடன் அமைப்பாக இருக்கும், கண்மணிகளின் விட்டம் அதிகரிக்கும், மார்பகங்கள் சமச்சீருள்ள வகையில் மாறும். இப்படி தான் கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிகிறார்கள்.

4 மாதத்தின் பிற நாட்களை விட கருமுட்டை வெளிப்படுதலின் போது மன அழுத்தம் குறைவாக இருக்கும், குறைவான தலைவலிகள் இருக்கும், தங்களைப் பற்றி நேர்மறையான உணர்வுகள் நிலைத்திருக்கும். கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமே.

5 கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக காட்சியளிப்பதற்கு உடல் பண்புகள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இந்நேரத்தில் பெண்களிடம் நல்ல மணம் வீசும் மற்றும் உரத்த குரலுடனும் இருப்பார்கள். ஆண்கள் இதனால் ஈர்க்கப்படுவார்கள்.

பெண்ணுக்கு கருமுட்டை வெளிப்படுதலின் போது அவள் கருத்தரிக்க அவளது உடல் மிகுந்த பலத்துடன் இயங்கும். அதனால் தான் கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தென்படுகிறார்கள். 

Leave a Reply

%d bloggers like this: