ஆண் குழந்தைகளுக்கான அர்த்தமுள்ள 10 பெயர்கள்

தவமிருப்பதை போன்று குழந்தையை கருவில் சுமக்க துவங்கும் சமயத்தில் அனைவரிடம் தோன்றுவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்கிற சந்தேகம் தான். அப்போதிலிருந்தே குழந்தைகளுக்கான பெயர் தேடல் துவங்கி குழப்பத்துடன் இருக்கும். குழந்தைகளுக்கு அடையாளமாக விளங்க போகும் பெயர் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது பலரின் குழப்பத்திற்கு காரணமாகிறது. இங்கு ஆண் குழந்தைகளுக்கான அர்த்தமுள்ள 10 பெயர்களை பார்க்கலாம்.

1 ஆதிக்

ஆதிக் என்றால் சிறந்தவன் என்றும், ஆதி என்றால் தொடக்கம் என்றும் பொருள்.

2 ஜெய்வந்த்

ஜெய்வந்த் என்றால் வெற்றி பெறுபவன் என்று பொருள்.

3 தன்விக்

தன்விக் என்றால் அரசன் என்று பொருள். உங்கள் வீட்டு குட்டி ராஜாவிற்கு பொருத்தமான பெயராக இருக்கும்.

4 ஹரித்

ஹரித் என்றால் சிங்கம் என்றும், ஹரி என்பது கடவுள் விஷ்ணுவையும் குறிக்கும்.

5 ருத்வா

ருத்வா என்றால் பேசுதல், பருவ நிலை என்று அர்த்தமாகும். மணிமணியாய் பேசப் போகும் குழந்தைகளுக்கு அற்புதமான பெயராகும்.

6 சாத்விக்

சாத்விக் என்றால் கடமை பேணுகின்ற, தெய்வ பக்தியுள்ள மற்றும் தூய்மையான என்று அர்த்தம். கள்ளம், கபடமற்ற தூய்மையான குழந்தைகளுக்கான சிறந்த பெயர்.

7 லக்ஸய்

லக்ஸய் என்றால் இலக்கு என்று பொருள். உங்கள் வாழ்வில் இலக்கை அடைய செய்ய போகும் குழந்தைக்கான பெயர்.

8 சஞ்சித்

சஞ்சித் என்பது கடவுள் விநாயகரின் ஒரு பெயராகவும், தலைமை, வெற்றி மற்றும் மேன்மை என்றும் பொருள் படும்.

9 கிரித்திஷ்

கிரித்திஷ் என்றால் இசை என்று அர்த்தமாகும். நாம் வாழ்வில் அழுகையும் கானம் என உணர்த்திய குழந்தைகளுக்கு அருமையான பெயராகும்.

10 யாதவ்

யாதவ் என்பது கிருஷ்ண பரமார்த்தாவின் பெயர்களுள் ஒன்று. உங்கள் வீட்டு குட்டி கிருஷ்ணருக்கு ஏற்ற பெயராக இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: